மாத தொடக்கத்திலே நகை பிரியர்களுக்கு GOOD NEWS...அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
மாத தொடக்கத்திலே தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை பிரியர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் செப்டம்பர் தொடக்கத்திலிருந்தே தங்கம் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதுவும் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், நேற்று மட்டும் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்தது.
தங்கம் விலை
இந்நிலையில் மாதம் தொடக்கத்திலே நகைபிரியர்கள் மகிழ்ச்சி ஏற்படக்கூடிய அளவிற்கு இன்று அதிரடியாக தங்கம் விலை குறைந்துள்ளது. அதன் படி 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ 30 குறைந்து ஒரு கிராம் ரூ 13,680க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையை போல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ 5000 குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?



