என்னது ஸ்டாலினுக்கு நேரம் சரியில்லையா? கட்சிப் பொறுப்பை உதய்யிடம் கொடுக்க நச்சரிக்கும் துர்கா?

தேர்தல் தோல்வி ஒருபக்கம்... உடல்நிலை ஒருபக்கம்.. என இரட்டை வண்டியில் சவாரி செய்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு தற்போது ஜாதக்கப்படி நேரம் சரியில்லை என்பதால், திமுக தலைமை பொறுப்பை உதய்யிடம் ஒப்படைக்கச் சொல்லி துர்கா ஸ்டாலின் வலியுறுத்தி வருவதாக அறிவாலய வட்டாரத்தில் வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

Oct 22, 2026 - 12:45
என்னது ஸ்டாலினுக்கு நேரம் சரியில்லையா? கட்சிப் பொறுப்பை உதய்யிடம் கொடுக்க நச்சரிக்கும் துர்கா?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சியை மீண்டும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தலைமை ஆலோசித்து வருகிறது. தேர்தல் தோல்வியால் கட்சித் தொண்டர்கள் சோர்வடையவில்லை என்றும், தொடர்ந்து மக்கள் பணியாற்றி மீண்டு வருவோம் என்றும் திமுக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கட்சியின் அமைப்பில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளத் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, கட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் கவனம் பெற்றுள்ளன.

திமுகவின் அமைப்புரீதியான மாற்றங்களின் ஒரு பகுதியாக, மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-ல் இருந்து 110 ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் புதிய மாவட்டக் கழகங்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாவட்டக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 70 ஆக நிர்ணயிப்பது, ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே அந்தப் பொறுப்பை வகிக்க முடியும் என்பது உள்ளிட்ட மாற்றங்களை திமுக தலைமை மேற்கொண்டது.

இந்த மாற்றங்கள் மூலம் கட்சியின் நிர்வாகத்தைப் பலப்படுத்தவும், அடிமட்ட அளவில் அமைப்பைச் சீரமைக்கவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே, செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறவிருந்த திமுகவின் முப்பெரும் விழா, மு.க.ஸ்டாலினின் உடல்நலக் குறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. பின்னர், ஒத்திவைக்கப்பட்ட விழா செப்டம்பர் 19-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

மேலும் அவ்வப்போது ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதால் அடுத்து கட்சி பொறுப்பு யாருக்கு என்ற கேள்விகள் எழத் தொடங்கி விட்டன.

உதயநிதியிடம் கட்சிப் பொறுப்பை ஒப்படைக்க வலியுறுத்துகிறாரா துர்கா?

இந்தச் சூழலில், திமுகவின் எதிர்காலத் தலைமை குறித்தும் கட்சி வட்டாரங்களில் விவாதங்கள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினின் ஜாதகக் கட்டம் வலுவாக இருப்பதாகவும், அவரிடம் கட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது சரியான முடிவாக இருக்கும் என்றும் ஜோதிடர்கள் ஆலோசனை வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, “உங்களுக்கு நேரம் சரியில்லை; கட்சிப் பொறுப்பை உதய்யிடம் ஒப்படைத்துவிடுங்கள்” என்று துர்கா ஸ்டாலின், மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருவதாக திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், ஜோதிடத்தின் அடிப்படையில் கட்சியின் தலைமைப் பொறுப்பை மாற்றுவது குறித்து மு.க.ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லை என்றும், இதனால் குடும்பத்துக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் திமுக தலைமை பொறுப்பு யாருக்கு ? மு.க. ஸ்டாலின் உடல்நிலை வலுக்குறைந்து வருவதால், தலைமை பொறுப்பு உதய்யிடம்  செல்ல  போகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்போம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow