முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு! - ரூ.15 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல்?

Feb 29, 2024 - 06:43
Feb 29, 2024 - 07:04
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு! - ரூ.15 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல்?

கடலூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவுக்குச் சொந்தமான இடங்களில் 12 மணி நேரம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 47 ஆவணங்களைக் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கடலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த  சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம்  நகர்மன்ற தலைவராக இருந்தார். அப்போது டென்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், இன்று (பிப்.28) பண்ருட்டி மற்றும் சென்னை உட்பட சத்யாவுக்குச் சொந்தமான 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீஸார் 12 மணி நேரம் சோதனை நடத்தினர். 

இந்த நிலையில் சோதனையின் முடிவில் ரூ.15 கோடி மதிப்பிலான 47 ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow