அதிசயம் ஆனால் உண்மை ! தங்கம், வெள்ளி விலை குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி
முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள் ஆச்சரியம் அடையும் வகையில் அதிசயம் ஒன்று நடந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்றே குறைந்து ஆறுதல் அளித்து இருக்கிறது.
வாரத்தின் கடைசி நாளான சனிக்கிழமை காலை, மாலை என இரண்டு வேளையிலும் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது. அன்றைய தினம் மாலையில் தங்கம் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்தது. கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து 13,100 விற்பனை ஆனது. சவரன் 1,04,800 விற்பனை ஆனது.
இதே போன்று வெள்ளியும் மாலையில் கிலோவிற்கு ரூ 6 ஆயிரம் உயர்ந்தது. கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து, ரூ.283 விற்பனை ஆகிறது. கிலோ வெள்ளி ரூ. 2,80,000 ஆக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்தே வாடிக்கையாளர்களை கவலை அடைய செய்தத்து.
வாரத்தின் தொடக்க நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து 1,04,160 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,020க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று இன்று சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.281க்கும் கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ஒரு கிலோ ரூ. 2,81,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சற்றே குறைந்துள்ள தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது.
What's Your Reaction?

