நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்... தங்கம் விலை மீண்டும் சரிவு!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.

Jul 7, 2026 - 10:56
நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்... தங்கம் விலை மீண்டும் சரிவு!

இந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. ஜூலை 3-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,600 என்ற உச்சத்தைத் தொட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று சவரனுக்கு ரூ.1,120 குறைந்திருந்த நிலையில், இன்று (ஜூலை 7) மீண்டும் சவரனுக்கு ரூ.1,280 அதிரடியாகக் குறைந்துள்ளது.

இதன் மூலம் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,07,200-க்கும், சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு ரூ.160 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,400க்கும் விற்பனையாகிறது. இதனால் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக விறுவிறுவெனக் குறைந்து வரும் வேளையில், வெள்ளியின் விலை இன்று எவ்வித மாற்றமுமின்றி நிலையாக உள்ளது. சென்னையில் இன்று சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,50,000 லட்சம் என்ற விலையிலும் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow