போட்டி போடும் தங்கம், வெள்ளி விலை ஏற்றம் : நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
நாள்தோறும் ஏறி வரும் தங்கம், வெள்ளி விலை ஏற்றத்தால், நகைப் பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (நவ.,26) ஆபரண தங்கம், கிராம் 11,800 ரூபாய்க்கும், சவரன், 94,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 176 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (நவ.,27) தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் குறைந்து, 11,770 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் சரிவடைந்து, 94,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, நான்கு ரூபாய் உயர்ந்து, 180 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று (நவ.,28) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 94,720க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.183க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம், வெள்ளி ஆகிய இரண்டும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு விலை ஏறி வருவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
What's Your Reaction?

