தொடரிலிருந்து வெளியேறிய அமெரிக்கா… காலிறுதிக்குள் பெல்ஜியம் மாஸ் Entry!
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
23 வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்க மெக்சிகோ கனடா ஆகிய மூன்று நாடுகளில் நடைபெற்று வருகின்றது.லீக் மற்றும் 2 வது சுற்று முடிவில் 16 அணிகள் 3வது சுற்றை எட்டியுள்ளன. தற்போது 3 வது சுற்றின் ஆட்டங்கள் தொடங்கியது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு சியாட்டில் நடந்த 3 வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்கா பெல்ஜியத்தை எதிர்கொண்டது.விறுவிறுப்பான இந்தப் போட்டியில் வலுவான இரு அணிகள் மோதியதால் ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கின.
ஆட்டத்தின் 9 வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் சார்லஸ் டி கெடெலேரே முதல் கோலை அடித்தார். இதற்கு 31 வது நிமிடத்தில் அமெரிக்காவின் மாலிக் டில்மேன் கோல் அடித்து பதிலடி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து 33 வது நிமிடத்திலேயே சார்லஸ் டி கெடெலேரே 2 வது கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.
இதையடுத்து ஆட்டத்தை தீவிரப்படுத்திய அமெரிக்கா, பெல்ஜியத்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.இருப்பினும் அதன்பின் இரு அணிகளும் எந்த கோலையும் பதிவு செய்யவில்லை.இதனால் முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் முடிந்தது.
ஆட்டத்தின் 2-வது பாதியில் இரு அணிகளும் ஆட்டத்தை தீவிரப்படுத்தின. அப்போது ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் ஹான்ஸ் வானாக்கன் கோல் அடித்து முன்னிலையை மேலும் உயர்த்தினார்.
தொடர்ந்து இரு அணிகளும் மாறி மாறி கோல் முயற்சியில் ஈடுபட ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும் அதனை கோலாக மாற்றமுடியவில்லை.பிறகு 90 நிமிடங்கள் முடிவில் பெல்ஜியம் 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதன் பின் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
அப்போது 90+3 நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் ரோமெலு லுக்காகு கோல் அடித்து அசத்தினார். இதன் பிறகு ஆட்டத்தின் இறுதி முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவை வெளியேற்றி பெல்ஜியம் கால் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
What's Your Reaction?