தங்கத்தின் விலை 3-வது நாளாக வீழ்ச்சி! பெண்கள் மகிழ்ச்சி...

தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாக குறைந்துள்ளதால், நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Aug 28, 2026 - 12:30
தங்கத்தின் விலை 3-வது நாளாக வீழ்ச்சி! பெண்கள் மகிழ்ச்சி...
Gold Rate Falls for 3rd Day in Tamil Nadu

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த  நிலையில், தற்போது இறங்குமுகமாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாக குறைந்துள்ளதால், நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை தங்கம் விலை கிராமுக்கு "ரூ.80 உயர்ந்து ரூ.15,030-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,20,240-க்கும்" விற்பனையானது. அதன்பிறகு செவ்வாய்க்கிழமை கிராமுக்கு "ரூ.20 குறைந்து ரூ.15,010-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,20,080-க்கும்" விற்பனை செய்யப்பட்டது.

விடுமுறை நாளான நேற்றுமுன்தினம் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

ஒரே நாளில் ரூ.2,280 சரிந்த தங்கம்:

இதையடுத்து நேற்று தங்கம் விலை இரண்டு முறை குறைந்தது. காலை நேர நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து ரூ.14,940-க்கும், ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.1,19,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மாலை நேரத்தில் மீண்டும் விலை குறைந்தது. கிராமுக்கு ரூ.285 குறைந்து ரூ.14,725-க்கும், சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ரூ.1,17,800-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.

இதன் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் "விலை ரூ.2,280" வரை சரிந்தது.

இன்றும் தங்கம் விலை குறைவு:

இந்த நிலையில், (ஆகஸ்ட் - 28) இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை "ரூ.75 குறைந்து ரூ.14,650-க்கு" விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் "ரூ.600 குறைந்து ரூ.1,17,200-க்கு" விற்பனையாகிறது.

சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் 22 கேரட் ஆபரணத் தங்கம் இதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 3 நாட்களில் மட்டும் "ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.380 குறைந்துள்ளது. இதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.3,040 வரை" விலை சரிந்துள்ளது.

வெள்ளி விலையும் சரிவு:

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி "ரூ.5 குறைந்து ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கு" விற்பனை செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ந்து மூன்று வாரங்களாக தங்கம் விலை ஏற்றம் கண்ட நிலையில், இந்த வாரம் விலை சற்று இறங்குமுகமாக காணப்படுகிறது. இதனால் வரும் நாட்களிலும் தங்கம் விலை தொடர்ந்து குறையுமா என்ற எதிர்பார்ப்பு நகை வாங்குபவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow