Gold Rate: தங்கம் விலை திடீர் சரிவு... நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்!
சென்னையில் இன்று (செப். 5) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 குறைந்துள்ளது.
தொடர்ந்து விலை உயர்வை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்றுக் குறைந்துள்ளது. இந்த விலை சரிவு, தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்தது. அதற்கு முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,320 அதிகரித்து ரூ.1,13,920 ஆகவும், ஒரு கிராம் ரூ.14,240 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று (செப்.,04) மீண்டும் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.960 அதிகரித்த நிலையில், ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும், ஒரு கிராம் ரூ.14,360-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தொடர்ந்து ஏற்பட்ட விலை உயர்வுக்கு பிறகு இன்று தங்கத்தின் விலை சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 குறைந்து, தற்போது ஒரு சவரன் ரூ.1,13,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.170 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.14,190-க்கு விற்பனையாகிறது.
இதனிடையே, தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000 ஆகவும் நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.
What's Your Reaction?