நகை வாங்கக் கடைக்குப் போறீங்களா? விலை என்னனு தெரிஞ்சிட்டுப் போங்க!

இன்று சென்னையில் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமில்லாமல், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Oct 16, 2026 - 10:30
Oct 16, 2026 - 10:44
நகை வாங்கக் கடைக்குப் போறீங்களா? விலை என்னனு தெரிஞ்சிட்டுப் போங்க!
today gold rate

தங்கம் விலை தொடர்ந்து ஒரு வாரமாகவே இறக்கம் கண்டு வரும் நிலையில், இன்று மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 13-ந்தேதி சவரனுக்கு ரூ.280 குறைந்து 1,09,480-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,685-க்கும் விற்பனையானது. அதைத்தொடர்ந்து 14-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து 1,08,720-க்கும், கிராமுக்கு ரூ.95 குறைந்து ஒரு கிராம் ரூ.13,590-க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று(அக்.,-15) சவரனுக்கு ரூ.600 குறைந்து 1,08,120-க்கும், கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.13,515-க்கும் விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,08,120-க்கும், ஒரு கிராம் ரூ.13,515-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2.40 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow