xiaomi 15 ultra: புதிய போன் மாடலுக்கு இந்தியாவில் என்ன விலை? அப்படி என்ன வசதி இருக்கு?

சீனாவினை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Xiaomi நிறுவனம் நேற்றைய தினம் (மார்ச் 2, 2025) Xiaomi 15 Ultra மற்றும் Xiaomi 15 அறிமுகப்படுத்தியது.

Mar 3, 2025 - 15:00
Mar 3, 2025 - 15:56
xiaomi 15 ultra: புதிய போன் மாடலுக்கு இந்தியாவில் என்ன விலை? அப்படி என்ன வசதி இருக்கு?
xiaomi 15 ultra model launch

மொபைலின் தேவை இன்றளவில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதுவும் AI தொழில்நுட்பம் தலைத்தூக்கிய நிலையில், அனைத்து முன்னணி மொபைல் நிறுவனங்களும் AI தொழில்நுட்பத்தினை உள்ளடக்கி புதிய மாடல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஜியோமி (Xiaomi) நிறுவனம் பார்சிலோனாவில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC- mobile world congress) நிகழ்வில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவினை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Xiaomi நிறுவனம் நேற்றைய தினம் (மார்ச் 2, 2025) Xiaomi 15 Ultra மற்றும் Xiaomi 15 அறிமுகப்படுத்தியது. இதில் என்ன ஸ்பெஷல்? இந்தியாவில் எப்போது கிடைக்கப்போகிறது? என்பது குறித்த தகவலை இனி காணலாம்.

புகைப்பட பிரியர்களுக்காக பிரத்யேக மாடல்:

AI தொழில்நுட்பத்தில் அதிநவீன வசதிகளுடன் Xiaomi 15 தொடர் Leica டியூன் செய்யப்பட்ட கேமரா மற்றும் Android 15 அடிப்படையாகக் கொண்ட HyperOS 2 ஐக் கொண்டுள்ளது. Xiaomi 15 Ultra மாடல் புகைப்பட பிரியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Xiaomi 15 Ultra மற்றும் Xiaomi 15 இரண்டும் Snapdragon 8 Elite செயலியில் இயங்குகின்றன. Xiaomi 15 UFS 4.0 சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது, Xiaomi 15 Ultra UFS 4.1 சேமிப்பக தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.

Xiaomi 15 Ultra:

·         சேமிப்பு அளவு-  16 GB/512 GB

·         பேட்டரி- 5,410 mAh

·         சார்ஜ் தன்மை- 90 W சார்ஜர், 80 W வயர்லெஸ் சார்ஜ்

·         Display size: 6.73 அங்குலம் (LTPO AMOLED)

·         கேமரா தன்மை:

·         பின்புற கேமரா: 50 MP Leica 1-இன்ச் சென்சார், 200 MP சூப்பர் டெலிஃபோட்டோ லென்ஸ், 50 MP மிதக்கும் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50 MP அல்ட்ராவைடு கேமரா.

·         முன்புறம் (Front camera):  32 MP

Xiaomi 15: பேட்டரி மற்றும் சார்ஜ் வசதி

·         சேமிப்பு அளவு- 12 GB/512 GB

·         பேட்டரி- 5,240 mAh

·         சார்ஜ் தன்மை-  90 W சார்ஜர் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜ்

·         Display size: 6.36 அங்குல AMOLED டிஸ்ப்ளே

·         கேமரா தன்மை: 50 MP பிரதான சென்சார், 50 MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50 MP டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

·         முன்புறம் (Front camera):  32 MP

ஜெமினி ஏஐ தொழில்நுட்பத்துடன் கூட்டு:

Xiaomi 15 தொடரில் எழுத்து, பேச்சு, அங்கீகாரம், பட மேம்பாடு மற்றும் வீடியோ படப்பிடிப்புக்கான AI தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியுள்ளது. Xiaomi நோட்ஸ், காலண்டர் மற்றும் கடிகாரத்திற்கான அணுகல் உட்பட Xiaomi-யின் பல பயன்பாடுகள் ஜெமினி ஏஜ-உடன் நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதற்காக Xiaomi நிறுவனம் கூகிள் உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இந்தியாவில் என்ன விலை?

Xiaomi 15 விலை EUR 999 (தோராயமாக இந்திய மதிப்பில் ₹90,000) இல் தொடங்குகிறது, மேலும் Xiaomi 15 Ultra விலை EUR 1499 (தோராயமாக இந்திய மதிப்பில் ₹1,36,000) இல் தொடங்குகிறது. இந்தியாவில் இந்த போன் மாடலுக்கான விலை நிர்ணயம் மற்றும் எப்போது கிடைக்கும்? போன்ற கூடுதல் விவரங்கள் மார்ச் 11 அன்று அறிவிக்கப்படும் என Xiaomi நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more:

World Wildlife Day: நிதி இல்லாமல் வனவிலங்கு பாதுகாப்பு எப்படி சாத்தியம்?

Oscar 2025: இந்திய ரசிகர்களின் கனவினை தகர்த்த டச்சு மொழி குறும்படம்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow