ஹார்ட்டின் திரைப்படம்....குமுதம் விமர்சனக் குழு....
காதல், பிரிவு, மறதி ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவான 'ஹார்ட்டின்' திரைப்படம், அழகான காட்சிகளும் சிறந்த நடிப்பும் கவர்ந்தாலும், திரைக்கதையில் புதுமை குறைவாக உள்ளது.
சா தி. மதம், இனம், மொழி, பணம், பவர் என எல்லா வற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, காதலை மனம் சார்ந்து மட்டும் பேசும் படம்தான் 'ஹார்ட்டின்
ஹீரோ சனந்த்தின் காதலில் கரைந்து போகும் மடோனா செபாஸ்டியன் தன் சுயத்தைப் பாதுகாக்க நினைக்க, காதலில் விரிசல் ஏற்படுகிறது. தங்கள் காதலின் சாட்சியாக நிற்கும் ஓர் ஒற்றை மரத்தின் பின்னணியில் அவர் களின் பிரேக்கப்பும் நிகழ்கிறது.
அதற்குப் பின் காதலே வேண்டாம் என நினைக்கும் சனந்த்தின் வாழ்க்கையில் இமயா வருகிறாள். ஆகாயம், நட்சத்திரம் என ஓவியம்போல் நிகழும் அந்தக் காதல், திருமணத் தில் முடியப் போகும் நேரத்தில் நாயகனுக்கு ஒரு விபத்து. அந்த விபத்தில் இமயாவை அவன் காதலித்த நாட்கள் மட்டும் காணாமல் போக, அவன் மனம் மறுபடியும் முதல் காதலி மடோனா செபாஸ்டியனைத் தேடுகிறது.
இந்தச் சூழ்நிலையில் இமயா எப்படித் தன் காதலனின் இழந்த நினைவை மீட்டெடுத்து, தன் காதலைக் காப்பாற்றுகிறாள் என்பதுதான் கதை. இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் சிறப்பு. இமயாவின் உதடு ஓவியம் என்றால், நடிப்பு காவியம். ஒரு சாதாரண நடையில் தன் உடைந்துபோன மனதின் வலியை அவர் வெளிப்படுத்தும் விதம் அற்புதம். மடோனா அழகில் மயக்கி, நடிப்பில் கிறங்கடிக்கிறார். ஹிரோ சனந்த் ஓகே இயக்குநர் கிஷோர் குமார் காதலை உணர்வுபூர்வமாகச் சொல்ல, காட்சிகளை அழகாக அமைத்திருந்தாலும், எந்தத் தனித்துவமும் இல்லாத ஒருவனுக்காக இரண்டு புத்திசாலிப் பெண்கள் வாழ்க்கையைப் பணயம் வைப்பது நெருடல்.
ஹார்ட்டின் '
லவ் டப்... லவ் டப்..
What's Your Reaction?