பிரதமர் தமிழ்நாட்டில் குடியேறினாலும் வாக்கு வாங்க முடியாது - கனிமொழி
"பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்"
தேர்தல் வந்தால் தமிழ்நாட்டையே சுற்றி வரும் பிரதமர் மோடி, இங்கு வீடு எடுத்து குடியேறினாலும் வாக்கு வாங்க முடியாது என திமுக எம்.பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
ஈரோடு மக்களவைத் தொகுதி வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து ஈரோடு மாவட்டம் சிவகிரியில் திமுக எம்.பி கனிமொழி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய கனிமொழி, "மழை, வெள்ளம் வந்தால் பிரதமர் வரமாட்டார். தேர்தல் வந்தால் தமிழ்நாட்டை அடிக்கடி சுற்றி வருகிறார். பிரதமர் மோடி தமிழ்நாட்டில் வீடு எடுத்து குடியேறினாலும் அவரால் வாக்கு வாங்க முடியாது. கரூரில் போட்டியிட முடியாமல் கோவையில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்" என விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய கனிமொழி, ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் முகாம் அமைத்து உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியில் I.N.D.I.A கூட்டணியின் ஆட்சி அமைந்தால் ரூ.500-க்கு கேஸ் சிலிண்டர், ரூ.75-க்கு பெட்ரோல், ரூ.65-க்கு டீசல் வழங்கப்படும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அடிப்படை ஆதார விலை வழங்கப்படும் என உறுதியளித்தார்.
What's Your Reaction?