அதிமுகவிற்கு எதிரி திமுக மட்டுமே... திமுகவை கடுமையாகத் தாக்கிப்பேசிய எஸ்.பி.வேலுமணி

2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுகவுக்கு எதிரி திமுக மட்டும் தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

Mar 28, 2024 - 21:19
அதிமுகவிற்கு எதிரி திமுக மட்டுமே... திமுகவை கடுமையாகத் தாக்கிப்பேசிய எஸ்.பி.வேலுமணி

2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுகவுக்கு எதிரி திமுக மட்டும் தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை தனியார் மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி,  நீலகிரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனை அறிமுகம் செய்து வைத்தார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “கடந்த அதிமுக ஆட்சியில் நீலகிரிக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். திமுக அரசு பொறுப்பேற்று 3  ஆண்டுகள் ஆகியும் எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மத்தியில் 35 திமுக எம்பிக்கள் இருந்தும் தமிழகத்திற்கு எந்த முன்னேற்றமும் இல்லை. திமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர், தமிழகத்தில் அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நீலகிரி லோக்சபா தொகுதிக்கு சிறந்த வேட்பாளரை கட்சி அறிவித்துள்ளது. வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்” என்றார். 

மேலும் பேசிய, “ஒரு பூத்துக்கு குறைந்தது 350 ஓட்டுக்கள் வாங்க இலக்கு நிர்ணயித்து பாடுபட வேண்டும்.  அதற்கு மேல் ஓட்டு வாங்கினால் பாராட்டுகிறோம். நமக்கு எதிரி திமுக தான், நீலகிரி தொகுதியில் அதிமுக, திமுகவுக்குத்தான் நேரடி போட்டி உள்ளது. பாஜக கட்சி 5 சதவீதம் ஓட்டுக்கள் வைத்துள்ளனர். 10 சதவீதம் ஓட்டுக்கள் வாங்கினாலும் பாஜக வெற்றிபெற முடியுமா என்ன. வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை குறைந்தது 50 ஆயிரம் ஓட்டுக்கள்  வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும்” என்று பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow