சென்னை வெள்ளம்.. 5000 கோடிக்கு என்ன கணக்கு? கேட்கிறார் நிர்மலா சீதாராமன்
சென்னையில் வந்த வெள்ளத்திற்கு முன்கூட்டியே 5000 கோடி வரவழைத்து கொடுத்தோம், அதை சரியாக பயன்படுத்தியிருந்தால் மிக்ஜாம் புயலில் சென்னை பாதிக்கப்பட்டிருக்குமா என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பணத்திற்கு என்ன கணக்கு என்றும் கேட்டிருக்கிறார்.
சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் "நான் முன்னேற்றமடைந்த பாரதத்தின் தூதர்" (விக்ஷித் பாரத் அம்பாசிடர்) என்ற திட்டம் குறித்து மாணவர்கள் இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்,
மாணவர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், எல்லாவிதமான மாணவர்களும் படிக்க வேண்டும் அவர்களுக்கு உகந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும், ஏறக்குறைய இலவச கல்வி அடிப்படையில் படித்து முடித்து வெளியே சென்று வேலை கிடைக்கக்கூடிய நல்ல கல்வி அமைப்பை ஆரம்பித்த ஐசரி கணேஷ் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,
நான் படித்த காலங்களில் உள்ள நிலைக்கும் இப்பொழுது உள்ள நிலைக்கும் மிக அதிகமாக வித்தியாசங்கள் உண்டு, அனுபவங்கள் பொறுத்தவரை அப்பொழுதும் ஒன்றுதான் இப்பொழுதும் ஒன்றுதான், ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய பாரதத்தில் என்னென்ன வித்தியாசங்கள் உள்ளது என்று நான் சொல்ல விரும்புகிறேன், இப்பொழுது கடந்த 15 ஆண்டுகளில் ஒவ்வொரு குடிமகன்களும் உழைத்தார்கள், அதற்கு இந்த அரசு உதவி செய்து வருகிறது,
இந்த அரசும் மக்களுடைய முன்னேத்திற்கு பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் என்னென்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எடுத்து கூறுகிறேன்.
நாடு முழுவதும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் எங்கே நடந்தது என்ற குறுகிய மனப்பான்மையுடன் யோசிக்காமல், நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பாரத நாடு முன்னேற வேண்டும் என்ற திட்டத்தை 10 ஆண்டுகளாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவிலேயே கோயம்புத்தூரில் தொழில்துறை சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கி தொழிற்சாலை திருச்சியில் அமைக்கப்பட்டுள்ளது, ஆனால் இது ஒரு பேருக்கு நடைபெற்று வந்தது, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் ஏன் முன்னேற்றம் அடையவில்லை என்று 2014இல் என்னிடம் கேள்வி கேட்டார்கள், ஆனால் இன்று பெரிய பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு இன்று பெரிய அளவில் பேசப்படுகிறது,
மோடி அவர்கள் இங்கே பத்தாண்டுகளில் டிபென்ஸ் காரிடர் என்ற திட்டத்தை கொண்டு வந்ததால் இன்று கப்பல் துறையில் இந்தியாவில் மிகச்சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்கள். உலகில் எங்குமே இல்லாத அளவிற்கு நமது நாட்டில் தனியார் விமான சேவைகள் அதிகபடியாக உள்ளது, 600க்கும் மேற்பட்ட விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.
விமான சேவையை இன்னும் அதிகமாக கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது, சின்ன சின்ன ஊர்களில் இருந்து அனைவரும் விமானத்தில் எளிதில் செல்வதற்கு 'உதான்' என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள், இதுபோன்ற திட்டங்களை கொண்டு வந்ததால் நமது நாட்டு மக்களுக்கு தான் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்,
பொருளாதாரத்தில் நாம் தான் மிக வேகமாக வளர்ந்து வருகிறோம், இதற்கு தேவையான அனைத்து திறன் பயிற்சிகளும் அளித்து வருகிறோம்,
இப்படி புதிய பாடத்திட்டத்தின் மூலமாக மாணவர்கள் திறன் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் விக்ஷீத் பாரத் எனப்படும் இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.
வெளிநாடுகளில் சென்று நமது திறமையை உழைப்பையும் காண்பித்து சம்பாதித்து வருகிறோம், இதை விட்டுவிட்டு நமது ஊரிலேயே அந்த அளவுக்கு சம்பாதிக்க வேண்டும், டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு உயர வேண்டும். நமது நாட்டிலேயே நாம் பணம் சம்பாதித்து விடலாம்,
வெளிநாடுகளில் கூட நமது தேசத்தை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள், கோவிட் காலங்களில் நாம் பொறுமையோடு இருந்தோம், இப்பொழுது பொருளாதாரத்தில் உயர்ந்து வருகிறோம், இப்படி முன்னோக்கி செல்வதே நமது கடமையாக இருக்கிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஒரு நாளைக்கு 43.3 கோடி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது இதை மிகப்பெரிய அளவில் அனைவரும் பயன்படுத்தும் விதமாக செய்ததால் நமது நாடு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னேறி உள்ளது.
நம்மை சுற்றி உள்ள நல்ல விஷயங்கள் என்னென்னவெல்லாம் நடக்கின்றதோ அதை நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் இந்த முயற்சியால் 2047ஆம் ஆண்டு நமது நாடு முதலிடத்தில் வரவேண்டும். பி எல் ஐ திட்டம் என்பதை இங்கே கொண்டு வந்ததற்கு காரணமே முதலீடுகளை ஊக்கவிக்கவே இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ளது,
மாசு இல்லாத இந்தியாவாக மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது பொழுது நாம் முதலில் இருக்க வேண்டும், முன்னேற்றம் அடைந்த பாரதத்தின் தூதராக நாம் இருக்க வேண்டும், 2047 இல் நீங்கள் தான் இந்த நாட்டின் பெரிய அளவிலான குடிமகன்கள், அப்பொழுது நமது நாடு முன்னேறிய நாடாக இருக்க வேண்டும்.
தென் மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட பயம் இல்லை ஆகையால் தான் 23 இடங்களில் எங்களது சின்னத்தில் போட்டியிட தயாராகி உள்ளோம். 2014 தூக்கிலிடப்பட்ட ஐந்து மீனவர்களை இலங்கையில் இருந்து மீட்டு ஈரோடு கொண்டு வந்தவர் மோடி அவர்கள். 2014 முதல் இப்போது வரை எத்தனை மீனவர்களை மீட்டு எடுத்து வந்துள்ளோம் என்று என்னால் கூறமுடியும் அது எங்களின் கடமை.
900 கோடியை முன்கூட்டியே கொடுத்து வைத்துள்ளோம், இதைத் தவிர சென்னையில் வந்த வெள்ளத்திற்கு முன்கூட்டியே 5000 கோடி வரவழைத்து கொடுத்தோம், அதை சரியாக பயன்படுத்தியிருந்தால் மிக்ஜாம் புயலில் சென்னை பாதிக்கப்பட்டிருக்குமா, ஏற்கனவே கொடுக்கப்பட்ட பணத்திற்கு என்ன கணக்கு. வெள்ளத்தில் சிக்கி சென்னை சீரழிந்தது. அந்த பணம் எங்கே போனது.
தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் பாஜக சார்பில் மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. கச்சத்தீவை இப்பொழுது பேசுவது ஏன் என்ற கேள்வி எழுப்பலாம், எங்களுக்கு அது சம்பந்தம் இல்லை என்று கூறினால் ஏன் இப்பொழுது இவ்வளவு பெரிய சர்ச்சையாக இருக்கிறது,
காங்கிரஸ் தேசிய கட்சியாக அப்பொழுது இருந்தது அவர்கள் ஏன் அப்பொழுது பதில் சொல்லவில்லை. இந்திரா காந்தி இறக்கும்பொழுது இதோடு சிறிய கல் பாறை இதை கொடுத்தால் பிரச்சனை இல்லை என்றார்கள், அப்பொழுது இருந்த கருணாநிதி அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாரா,
தமிழ் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக தான் இது பொய் பிரச்சாரம் என்று கூறி வருகிறோம், இப்படி தேசிய கட்சியாக உள்ள காங்கிரஸ் தமிழர்களுக்கு எதிராக அனேக செயல்களை செய்தார்கள். தேர்தல் நேரத்தில் என்று இல்லை நாட்டினுடைய சுதந்திரத்திற்காக எப்பொழுது வேண்டுமானாலும் பேசலாம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
What's Your Reaction?