புதிய கதைக்களத்தில் புத்துயிர் பெறும் கார்த்திகை தீபம்.. யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்களின் மனங்களை கவர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த ‘கார்த்திகை தீபம்’ தொடர் தற்போது புத்தம் புதிய கிராமத்து கதைக்களத்தில் புது நட்சத்திரங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது.

புதிய கதைக்களத்தில் புத்துயிர் பெறும் கார்த்திகை தீபம்.. யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?
புதிய கதைக்களத்தில் புத்துயிர் பெறும் கார்த்திகை தீபம்.. யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?

தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இதில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று கார்த்திகை தீபம். கார்த்திக் ராஜ், ஹர்திகா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல் மக்களின் மனங்களை கவர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.

தற்போது இந்த சீரியல் வரும் திங்கள் முதல் புத்தம் புதிய கிராமத்து கதைக்களத்தில் புது நட்சத்திரங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ரேஷ்மா பசுபுலேட்டி கார்த்திக்கின் அத்தையாக சாமுண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கார்த்திக்கு ஜோடியாக ஜீ கேரளம் சேனல் மூலமாக பாப்புலரான வைஷ்ணவி நடிக்க உள்ளார். மேலும் பழம்பெரும் நடிகர்களான விஜயகுமார், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இதனால் கார்த்திகை தீபம் சீரியல் புதிய பொலிவுடன் சின்னத்திரையை கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow