வெறிநாய் கடித்து 2.42 லட்சம் பேர் பாதிப்பு… வெளியான பகீர் டேட்டா!

தமிழகத்தில் வெறிநாய் கடித்து 2 லட்சத்து 42 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 22 பேர் உயிரிந்துள்ளதாகவும் அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார். 

Sep 30, 2024 - 10:30
வெறிநாய் கடித்து 2.42 லட்சம் பேர் பாதிப்பு… வெளியான பகீர் டேட்டா!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள குட்டப்பாளையத்தில் உள்ள சேனாபதி காங்கேயம் ஆராய்ச்சி மையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்தது என்னவென்றால், ”தமிழகத்தில் வெறிநாய் கடித்து 2 லட்சத்து 42 ஆயிரம் பேர் பாதிப்பு 22 பேர் உயிரிழப்பு. ஆடு மாடு போன்ற விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளும் உயிரிழப்பு ஏற்பட்டு விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார்.

மேலும், ”அதிக தெரு நாய்கள் வாழும் நாடாக இந்தியா  மாறி வருகின்றது. இதில் வருத்தமான செயல் என்னவென்றால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கின்றது. இந்த நாய்களால் பல்வேறு பிரச்னை ஏற்பட்டு வரும் சூழலில் மிருகங்களின் ஆர்வலர்கள் என்று கூறிக்கொண்டு வரும் ஒரு கூட்டம் இதைப் பற்றி கவலைப்படாமல் பொது இடங்கள், பீச், பார்க் ஆகிய இடங்களில் பிஸ்கட் பாக்கெட் வாங்கிக்கொண்டு தெருநாய்களுக்கு உணவளிப்பது. இதுதான் மிருகத்தின் மீது அவர்கள் காட்டக்கூடிய கரிசனை என்று நினைப்பதுதான் இந்திய நாட்டில் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆபத்து. அவர்களுக்கு மிருகத்தின் மீது கரிசனையும் பிரியமும் இருக்கிறது என்றால் வரவேற்கத்தக்கது ஆனால் அவர்கள் வீடுகளிலே நாய் வளர்க்க வேண்டும்.

மாடுகளுக்கு அடுத்ததாக முதல் முதலாக வனவிலங்கை வீட்டு விலங்காக மாற்றியதில் நாய். ஆகவே மனிதனுக்கு நாய்களுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. தமிழ்நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் ஜூன் வரை மட்டும் 2.42 லட்சம் பேர் நாய்கள் கடித்து பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த நாய் கடிகளால் 22 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னமும் இந்த வருடம் முடிவில் இது அதிகரிக்க போவதாகவும் தெரிவித்தார். அரசுக்கும் சரி சுகாதாரத் துறைக்கும் சரி சவாலான விஷயமாக இந்த நாய்க்கடி இருந்து வருகின்றது. இந்த பிரச்னையை நிச்சயமாக முதல்வருடைய அரசு திட்டத்தை வகுத்து ஒரு நல்லதொரு முடிவை எடுக்கும்” என அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow