மின்சார உதடுகள்-காது கொடுத்துக் கேட்டவள்
"மின்சார உதடுகள்" என்பது வாழ்க்கை, மரணம், காதல், ஆன்மிகம் மற்றும் மனித மனத்தின் ஆழங்களை ஆராயும் வித்தியாசமான நாவலாகத் தெரிகிறது. "செத்து செத்து விளையாடலாமா?" என்ற நகைச்சுவை வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான எல்லைகளை கேள்விக்குள்ளாக்கும் சிந்தனைகளை இந்த நாவல் முன்வைக்கிறது. பல்வேறு தத்துவங்கள், ஆன்மிகக் கருத்துகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை இணைத்து, வாசகர்களை ஒரு புதிய சிந்தனைப் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. எழுத்தாளர் "ஒளித்துகள்" தனது தனித்துவமான நடைமுறையால், இறையன்பும் மனித உணர்வுகளும் கலந்த ஒரு ஆழமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறார்.
7. காது கொடுத்துக் கேட்டவள்
அனந்தநாக், ஜம்மு காஷ்மீர், பிஸ்மில்லா மண்டப வாசல். சீட்டா, பென்ஸின் கதவைத் தொட்டபோது, பின்னால் பத்தடி தூக்கி வீசப்பட்டான். அவனுடைய கையில் இருந்த துப்பாக்கி எட்டு அடியில் விழுந்தது. அந்த கார்களுக்குள் இருந்தவர்கள் வலிப்பு வந்த மாதிரி கோணி இழுத்துக்கொண்டு கிடந்தார்கள்.
“அய்க்கிடோ” என்று ஒரு ஜப்பானிய டார்ஷியல் ஆர்ட் இருக்கிறது. எதிராளியின் ஆற்றலை அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்துவது. தமிழ்நாட்டின் பாரம்பரிய வர்மக்கலை... உடம்பில் ஆற்றல் புள்ளிகளைக் குறித்துக் கொடுக்கிறது.
யானைகள் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் கலைவாணன் சொல்கிறார்... "நாலாயிரம் கிலோ யானை ஒரு நாலு வயசுக் குழந்தையைப் போலச் சரிந்து உட்கார, அதன் காதுக்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அங்குசத்தால் லேசாகக் குத்தினால் போதும்!"
சீட்டாவின் உள்ளங்கைக்குள் சில்வியாவின் ஆள்காட்டி விரல் பல்லாங்குழி விளையாடியிருந்தது. அய்க்கிடோவும் வர்மமும் கலந்த குத்து அது. பழந்தமிழ்ப் பெண்கள் புலியை முறத்தால் அடித்தார்கள் என்று படித்திருக்கிறாள். துப்பாக்கியுடன் வந்த சீட்டாவை வெறுங்கையால் உதைத்தாள் என்று பெயர் வாங்கினாள் சில்வியா.
தான் உரிய ஸ்விட்சுகளை அழுத்திய பிறகும் ஏன் பாம்கள் வெடிக்கவில்லை என்று குழம்பிய சீட்டா, கொஞ்சம் புரிந்துகொள்ள விரும்பி விளக்கம் கேட்கிற மாதிரியும், தன்னைக் காருக்குள்ளிருந்து அடித்துத் தூக்கி வீசிய, ஜெபருன்னிஸா என்று நினைத்த பெண்ணை மிரட்டுகிற மாதிரியும் பேசினான்.. அதைவிட வலியோடு முனகினான் என்று சொன்னாலும் தகும்.
அவனுக்கு எதுவும் புரிந்த மாதிரி இல்லை, கைகளில் ஒரு ஐஸ் கட்டியை வைத்தது போல இருக்கிறது. கால்கள் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அதனால் எழுந்து நிற்க வாய்ப்பில்லை என்று இடது மூளை கைவிரித்துவிட்டது.
"ஏன், எந்த குண்டும் வெடிக்க மாட்டேங்குது... என்னாச்சு..?"
'மைண்ட் வாய்ஸ்' என்று சீட்டா கன்ஃப்யூஸ் ஆகிச் சத்தமாகவே கேட்டுவிட்டான்.
"நீ வெச்சிருந்தாத்தானேடா வெடிக்கும்? ஒரு நிமிஷம் எங்களை எல்லாம் அல்மோஸ்ட் கொன்னுட்டியே! உன்ன..?” அவனை மேலும் அடிக்கப் போன சலீமைத் தடுத்தாள் சில்வியா.
"அவன் பாம் செட் பண்ணது உண்மைதான். ராதிகாம்மாவிடம் சொல்லி பாம் ஸ்க்வாட் வர சொல்லியாச்சு. அவங்க அனுப்புன டீம்தான் பின்னாடி ஏறுன சீட்டாவோட பாய்ஸை பாப்கார்ன் மாதிரி பாக்கெட் பண்ணி வெச்சிருக்காங்க!" என்றாள் சில்வியா.
"யாரு ராதிகா... யாரு நீ.. ஜெபருன்னிஸா. நீ யாரோட மோதியிருக்க தெரியுமா? இதற்கான பதில் உனக்கு கிடைச்சேயாகும்" என்றான் சீட்டா.
"நீ முதல்ல யாரோடு பேசிட்டிருக்கேன்னு தெரிஞ்சுக்க. பாதகம் செய்பவரைப் பாத்தா மூஞ்சில துப்புன்னார் எங்க ஊர் பாரதி! என் பேர் சில்வியா! நீ யார்ட்ட சொல்வியே சொல்வியோ, சொல்லிக்கோ? வரச்சொல்!" என்றாள்.
அந்த உயரமான வெய்ட்டரும் பின்னால் இருந்த காரில் இருந்து
அடித்து இறக்கப்பட்டவர்களில் முதல் ஆளாகக் கிடந்தான்.
"இந்த வெய்ட்டரைப் பார்க்கும்போதே ஏதோ சம்திங் ராங்னு புரிஞ்சுக்கிட்டேன். வொய்ன் கிளாஸ்ல ஜூஸ் கொண்டு வந்தான். ஓகே! ஆனா பாரு ஒவ்வொண்ணும் வேற வேற மாடல். அதுலேர்ந்தே இவன் இந்த வேலைக்கு வந்தவனில்லைனு தெரிஞ்சுக்கிட்டேன்!”
“கிளாஸ்லேயே இவ்ளோ இருக்கா... சரக்கடிக்காத நீ இதப்பத்திப் பேசுற!” வியந்தான் சலீம்.
சில்வியா தொடர்ந்தாள்... "அ.முத்துலிங்கம் சாரோட 'வையன்ன கானா' சிறுகதை படிச்சிருக்கியா... ரசனை என்றால் அப்படி இருக்கணும்! அத்தோட, மூஞ்சில மைக்ரோ எக்ஸ்பிரஷன்னு ஒண்ணு இருக்கு. அகத்தின் அழகை முகம் காட்டிக் கொடுத்துடும். பால் எக்மேன் அதுல ரிசர்ச் பண்ணின உளவியலாளர். சீட்டாக்குதான் தாங்க்ஸ் சொல்லணும், அவன் முகம் காட்டிக் கொடுத்துவிட்டது.”
மணமேடை அருகே வழக்கத்தைவிடப் பெரியதாக இருந்த பூச்செண்டின் கீழே பச்சை சிவப்பு நிறத்தில் வயர்களைக் கொண்ட அந்த வஸ்துவை அகற்றிக் கொண்டிருந்தார்கள். இந்த பாம் கனெக்ட் பண்ணியிருக்க. கலெக்டி+விட்டியில் இருந்த 100 பாஸ்வேர்டைஸ்க்ராம்பிள பண்ணியிருந்தாள் சில்வியா.
சீட்டாவின் வலது காதுக்குக் கீழே கழுத்தில் ஒரு சிவப்பு நிற டாட்டூ இருந்தது, தெளிவாகவே தெரிந்தது.
முத்தம் கொடுப்பதுபோல ரத்தச் சிவப்பில்...
'உதடுகள்'.
What's Your Reaction?

