ரஜினியின் சென்டிமென்ட் இடத்துக்கு ஆப்பு? ராகவேந்திரா மண்படம் இனி கிடையாதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம் அமைந்துள்ள இடத்தில் நட்சத்திர ஓட்டல் கட்டப்பட இருப்பதாக வெளியாகியுள்ள தகவல், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sep 30, 2026 - 10:21
ரஜினியின் சென்டிமென்ட் இடத்துக்கு ஆப்பு? ராகவேந்திரா மண்படம் இனி கிடையாதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ரஜினியின் ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கும், ரசிகர்களால் தலைவர் ரஜினிகாந்த் என்று அன்போடு அழைக்கக்கூடிய தலைவரின் சொந்தமான ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. 1990களில் கட்டப்பட்ட இந்த மண்டபம் ரஜினிகாந்தின் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான பல முக்கிய சந்திப்புகளுக்கு சாட்சியாக இந்த மண்டபம் திகழ்ந்துள்ளது.

மேலும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது, ரசிகர் மன்றப் பணிகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பது என பல்வேறு நிகழ்வுகள் இந்த மண்டபத்தில் நடைபெற்றுள்ளன. குறிப்பாக அரசியலுக்கு வருவது தொடர்பாக ரஜினிகாந்த் அறிவித்த முக்கிய தருணங்களிலும் இந்த மண்டபம் கவனம் பெற்றுள்ளது.

மண்டபம் இருக்கும் இடத்தில் ஓட்டலா?

இந்நிலையில், ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம்  அமைந்துள்ள இடத்தில் நட்சத்திர ஓட்டல் கட்டப்பட இருப்பதாக ரஜினிகாந்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அதிர்ச்சியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மண்டபத்தின் எதிர்காலம் என்னவாகும் என்று கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை  மண்டபத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் ரஜினிகாந்தே ஓட்டல் கட்டப்போகிறாரா? அல்லது வேறு ஏதேனும் கட்டுமான நிறுவனம் மூலம் ஓட்டல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதா? என்ற பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow