காலாண்டு விடுமுறைக்குப்பின் பள்ளிகள் இன்று துவக்கம்!
தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறைக்குப் பிறகு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவத்தேர்வுகள் கடந்த மாதம் செப்டம்பர் 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் நடைபெற்றது. அதன்பிறகு, மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடங்கியது.
இந்த நிலையில், 9 நாட்கள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
காலாண்டு விடுமுறை முடிந்து உற்சாகமாக மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அந்தவகையில் சென்னையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் இன்று காலை 9 மணிக்கு துவங்கிய நிலையில், காலாண்டு விடுமுறைக்கு பிறகு மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்
அதுமட்டுமல்லாமல், விரைவில் பருவமழை தொடங்க இருப்பதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கான 2-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களை விரைந்து வழங்கவும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
What's Your Reaction?