பரந்தூர் விமான நிலையம்.. 2ம் கட்ட நிலஎடுப்பு அறிவிப்பும் வெளியீடு! எங்கு தெரியுமா?..
பரந்தூர் விமான நிலையத்துக்காக காஞ்சிபுரம் சிறுவள்ளூர் கிராம நிலஎடுப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையமானது சுமார் 5,300 ஏக்கர் பரப்பளவில் ரூ.32,704 கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூரில் கட்டப்பட இருக்கிறது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதால், எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து முதற்கட்டமாக பொடாவூர் கிராமத்தில் விமான நிலையத்துக்கான நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, பொன்னேரிக்கரை நிலஎடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சிறுவள்ளூர் கிராமத்தில் 1,75,412 சதுரமீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக 30 நாட்களுக்குள் பொதுமக்கள் கோரிக்கை கருத்துகள் தெரிவிக்கலாம் எனவும், ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?