தேர்தலுக்கான அரசியல் தேவையில்லை...மக்களுக்கான அரசியலே தேவை - சீமான்
தேர்தலுக்கான அரசியல் தேவையில்லை, மக்களுக்கான அரசியலே தேவை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வீரப்பன் மகள் வித்யாராணியை ஆதரித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் தேர்தலுக்கான அரசியல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாற்றத்தின் மூலமாக மக்களுக்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்று கூறினார். தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையாக மாறியுள்ள கச்சத்தீவு உள்ளிட்ட அனைத்தையும் அண்டை நாடுகளுக்கு தாரை வார்த்த திராவிட கட்சிகள், தற்போது தமிழர்களுக்கான நாடகம் நடத்திக் கொண்டு வாக்கு சேகரித்து வருவதாகவும், அக்கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் இலவச கல்வி, இலவச மருத்துவம் போன்ற இலவசங்கள், திட்டங்களாக இல்லாமல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி கடந்த 13 ஆண்டு காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், ஆனால் அவற்றை திமுக, அதிமுக அரசுகள் முறியடிக்கும் வகையில், பணம் கொடுத்தும், பல்வேறு இலவசங்களை வழங்கியும் மக்களுக்கான எந்த முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். எனவே இலவசங்கள், திட்டங்களாக இல்லாமல் மக்களுக்கான வாழ்வாதாரமாக இருக்க வேண்டும் என சீமான் கேட்டுக்கொண்டார்.
What's Your Reaction?