ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக எம்.பிக்கு தொடர்பு..? விசாரணையில் கிடைத்த பகீர் தகவல்கள்
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், ஹவாலா இடைத்தரகர் தங்கக் கட்டிகளை விற்று பணம் கொடுத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், ஹவாலா இடைத்தரகர் தங்கக் கட்டிகளை விற்று பணம் கொடுத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தற்போது விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், ஹவாலா இடைத்தரகர்கள் பங்கஜ், சூரஜ் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று 11 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், சூரஜ்-க்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், புதுச்சேரி எம்.பி. செல்வகணபதி தன்னை தொடர்பு கொண்டு 20 கிலோ தங்க கட்டிகள் இருப்பதாகவும், அதை விற்றுத் தருமாறு கூறியதாகவும் சூரஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், 15 கிலோ தங்க கட்டிகளை சென்னை சவுகார்பேட்டை, என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நகைக்கடைகளில் விற்றுக்கொடுத்ததாகவும், மீதி 5 கிலோ தங்க கட்டிகளை அவர்கள் புதுச்சேரியிலேயே விற்பனை செய்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே, தமிழ்நாடு பாஜக நிர்வாகி கோவர்தனின் ஓட்டுநர் விக்னேஷிடமும், சூரஜ் செல்போனில் அடிக்கடி பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சூரஜூடன் தொடர்பில் இருந்த மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?