கோவை அருகே தேர்தல் களேபரம்.. உதவி ஆணையரின் சீருடை சட்டைப் பையை கிழித்த திமுக நிர்வாகி
கோவையில் வாக்குச்சாவடி அருகே பூத் சிலிப் வழங்கியதை கண்டித்த உதவி ஆணையரை தாக்கியதாக கூறி திமுக நிர்வாகியை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.
கோவை பி.என்.புதூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அங்கு வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு பூத் சிலிப்புகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வழங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது கட்சி சின்னம் மற்றும் கொடியுடன் யாரும் இங்கு இருக்கக்கூடாது என உதவி ஆணையர் நவீன்குமார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால்பி.என்.புதூர் பகுதி திமுக செயலாளர் பாக்யராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் உதவி ஆணையரின் சீருடை சட்டைப் பை கிழிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாக்யராஜை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று, வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?