நிலம் ஆக்கரமிப்பு.. ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.. தென்காசியில் பரபரப்பு

தென்காசியில் ஊர் மக்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Apr 22, 2024 - 17:46
நிலம் ஆக்கரமிப்பு.. ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.. தென்காசியில் பரபரப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பாறைப்பட்டி கிராமத்தில் சர்வே எண் 762 மற்றும் 761 ஆகிய நிலத்தை அப்பகுதி மக்கள் சாமி கும்பிட பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த இடத்தை பொன்னுசாமி என்பவர் ஆக்கிரமித்து வீடு கட்டியதாகவும், இதனால் தாங்கள் சாமி கும்பிட இடம் இல்லாமல் தவித்து வருவதாகவும பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து 12 வார காலங்களுக்குள் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த பிரச்சினையில் சிவகிரி தாசில்தார் ரவிக்குமார் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறார் என்

றும் எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  ஊர் மக்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை மீட்டு  சாமி கும்பிட தேவையான இட வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்திருந்தனர். 

அப்போது முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் ஆட்சியர் அலுவலக வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் ஆட்சியரை சந்திக்க 4 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

அப்பொழுது மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்  இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow