தவெக மாநாடு - இறுதி கட்ட பணிகள் தீவிரம்

தமிழக வெற்றிக் கழக மாநாடு திடலில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Oct 26, 2024 - 13:29
தவெக மாநாடு - இறுதி கட்ட பணிகள் தீவிரம்

தமிழக வெற்றிக் கழக மாநாடு திடலில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு கொள்கை விழக்க திருவிழா, விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் உள்ள வி.சாலையில் நாளை நடைபெற உள்ளது. விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப்போகிறார் என பலரும் கேள்விகளை அவரை நோக்கி வீசி வந்த சூழலில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரையும் ஈர்த்து வருகிறது.

மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலையம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது.

மேலும் மேடையின் வலதுபுறம் தமிழ் அன்னை, சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் விஜய் நிற்பது போன்ற கட்-அவுட்களும் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், முகப்பில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. 

இதுதவிர 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, வெகுதொலைவில் இருந்து மாநாட்டை பார்க்கும் வகையில் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கும் பணி, 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 300-க்கும் மேற்பாட்ட நடமாடும் கழிவறைகள் அமைப்பது என அனைத்து வித பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

 இதனிடையே மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு, தண்ணீர், மிக்சர், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநாடு நுழைவாயில் பகுதியினை காவல்துறையினர் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரையும் அப்புறப்படுத்தினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow