20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த சூர்யா – ஜோதிகா..!
தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்படும் நட்சத்திர தம்பதிகளில் ஒருவரான சூர்யா - ஜோதிகா, திருமணமாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், மீண்டும் இணைந்து திரையில் தோன்றியுள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
The Hollywood Reporter India இதழின் ஆகஸ்ட் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஜோடி, தங்களது காதல், குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர்.
1999-ல் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்த சூர்யா - ஜோதிகா, தொடர்ந்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் ஜோடியாக நடித்தனர். திரையில் மலர்ந்த நட்பு பின்னர் காதலாக மாறி, 2006-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு இருவரும் முழுநீள படத்தில் இணைந்து நடிக்கவில்லை. தற்போது, நல்ல கதை அமைந்தால் மீண்டும் இணைந்து நடிக்கத் தயாராக இருப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் இந்த அறிவிப்பை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
சூர்யா - ஜோதிகா ஜோடியாக முழுமையான கதாபாத்திரங்களில் கடைசியாக நடித்த திரைப்படம் 2006-ஆம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல். திருமணத்திற்குப் பிறகு அவர்கள் ஒன்றாக திரையில் தோன்றியிருந்தாலும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் முழுநீள காதல் கதையில் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?

