வீட்டில் பிரசவம் பார்த்தால் நடவடிக்கை-சுகாதாரத்துறை எச்சரிக்கை

கர்ப்பிணி பெண்கள் பிரசவம் தரித்த மூன்று மாதத்தில் இருந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்

Nov 21, 2024 - 13:49
Nov 21, 2024 - 13:54
வீட்டில் பிரசவம் பார்த்தால் நடவடிக்கை-சுகாதாரத்துறை எச்சரிக்கை

கர்ப்பிணி பெண்கள் முறையாக மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்களா? என்ற கண்காணிப்பை தீவிரப்படுத்த கிராம சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குன்றத்தூர் அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வாட்ஸ் ஆப் குழுவில் வந்த குறிப்பை பயன்படுத்தி கணவனே மனைவிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் தனது மனைவி சுகன்யாவிற்கு  3ஆவது முறையாக கடந்த நவ.17ஆம் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டதாகவும், பின்னர் வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்ததாகவும் கூறப்படுகிறது

முன்னதாக, மனைவிக்கு பிரசவ வலி வந்த போது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்து மனோகரனே பிரசவம் பார்த்ததாகவும், இதுகுறித்த தகவலை அவர் வைத்திருந்த வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில், கர்ப்பிணி பெண்கள் முறையாக மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்களா? என்பதை கண்காணிப்பை தீவிரப்படுத்த கிராம சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்கள் பிரசவம் தரித்த மூன்று மாதத்தில் இருந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும், அவர்களுக்கான தடுப்பூசிகள் இரும்பு சத்து மாத்திரைகள், ஸ்கேன் போன்றவை முறையாக கிடைக்கிறதா? என்று கிராமப்புற செவிலியர்கள் அதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பிரசவக்காரர் இருக்கும் நேரத்தில் அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.வீட்டில் வைத்து பிரசவம் பார்ப்பது தாய்க்கும் சேய்- யின் உயிருக்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

பிரசவத்திற்கு பிறகு அதிக ரத்தப் போக்கினால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மேலும் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. அதனால் அனைத்து பிரசவங்களும் மருத்துவமனைகளில் நடக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow