மறுபடியும் வந்துட்டான் மக்களே டெங்கு.... இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி என்னது தெரியுமா?
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில், இது குறித்து மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையும் மக்கள் அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
தமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டில் இதுவரை சுமார் 18,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பர் மாதத்தில் மிகக் கடுமையான முறையில், அதாவது 2 மடங்கு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதியதாக 72 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்ப்பட்டுள்ளது மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சல் குறித்து மருத்துவர்களின் ஆலோசனை:
சென்னையில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள மருத்துவர்களிடம் ஆலோசனைகள் அவசியமாகிறது.
இவர்கள் வீடுகளிலேயே தங்கி ஓய்வு எடுத்து தகுந்த மருத்துவர் ஆலோசனையுடன் குணமடைந்து விடுகின்றனர். மீதமுள்ள 5% முதல் 10% நோயாளிகள் மட்டுமே தீவிர மருத்துவக் கண்காணிப்பு தேவைப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். சளி, இருமல் இல்லாமல் கடுமையான காய்ச்சல் மற்றும் கடுமையான உடல்வலி இருந்தால் அது டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை:
டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி கொசு ஒழிப்பு மற்றும் தடுப்புப் பணிகளை முடுக்கவிட்டுள்ளது. மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 3500க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூவம், அடையாறு போன்ற பெரிய நீர்நிலைகளில் கொசுக்களைக் கட்டுப்படுத்த நவீன ட்ரோன்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கு அறிவுரை:
What's Your Reaction?



