தீபாவளி பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து
தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, தமிழ்நாடு ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, தமிழ்நாடு ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தீபாவளி என்பது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் பண்டிகை. அறியாமைக்கு எதிராக அறிவும், தீமைக்கு எதிராக நன்மையும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் விழாவாகும் என குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை பிரகாசமான எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும் தூண்டுவதாகவும், மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தெய்வீக தீபத் திருநாளில், அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வளமான வாழ்வு கிடைக்க வாழ்த்துவதாக பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீபாவளி தீமையின் மீது நன்மை, இருளின் மீது ஒளி மற்றும் அறியாமையின் மீது ஞானத்தின் வெற்றியின் அடையாளமாகும் என கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தித்திக்கும் இந்த இனிய திபாவளித் திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும் என தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்தில், தீபாவளித் திருநாளை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அருமை தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும் என்றும்,
அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும், அன்பு, அமைதி, செல்வம் நிலைத்து நீடித்திருக்கட்டும், தீப ஒளித் திருநாளைப் பாதுகாப்பாகக் கொண்டாடி மகிழ்வோம் என கூறியுள்ளார்.
What's Your Reaction?