சென்னை மக்களே கவனம்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Sep 8, 2026 - 14:44
சென்னை மக்களே கவனம்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Rain Alert for Chennai

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவியது.

தற்போது சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தெற்கு தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழ்நாடு பகுதிகள் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவி வருகிறது.

மேலும், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் சுமார் 0.9 கி.மீ உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு :

இன்று (08-09-2026) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகம்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை நிலவரம் :

இன்று முதல் வரும் நாட்களில் உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. சில பகுதிகளில் மட்டும் வெப்பநிலை சற்று உயர வாய்ப்புள்ளது.

கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது.

உள் தமிழகத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. கடலோர பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (08-09-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow