இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், சென்னையிலும் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், சென்னையிலும் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் மழை நிலவரம் :
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவி வருகிறது.
இன்று (01-09-2026) மழைக்கு வாய்ப்பு :
இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏனைய தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை எப்படி இருக்கும்? :
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. எனினும், சில இடங்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும்.
சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3° செல்சியஸ் வரை அதிகமாகவும், ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் இன்று வானிலை :
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38° செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28° செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை :
தமிழ்நாட்டின் தென் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
இப்பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?