இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க மக்களே.... தீபாவளிக்கு கட்டுப்பாடு விதிமுறைகள் அறிவிப்பு!

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Oct 20, 2024 - 13:29
இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க மக்களே.... தீபாவளிக்கு கட்டுப்பாடு விதிமுறைகள் அறிவிப்பு!

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. கிருஷ்ண பெருமான் நரகாசுரனை வதம் செய்யும் நாளே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி திருநாளன்று அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கடவுளை வழிபடுவது வழக்கம். இதனையடுத்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை பட்டாசுகள் வெடித்தும், விதவிதமான பலகாரங்கள் சாப்பிட்டும் அந்நாளை சிறப்பாகக் கொண்டாடுவர்.

அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், காலை 6மணி முதல் 7மணி வரையும், இரவு 7மணி முதல் 8மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை தவிர்க்க மக்களுக்கு அறிவுறுத்தல். மேலும், பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வலியுறுத்தல்.

குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.

மேலும், தீபாவளி நெருங்கிக்கொண்டிருப்பதால் ஜவுளி கடைகளிலும், பட்டாசுக் கடைகளிலும் பொதுமக்களின் சிரமமின்றி செல்ல, முக்கிய கடைவீதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதாவது, வார இறுதி நாட்களான 20.10.2024 (இன்று), 26.10.2024 மற்றும் 27.10.2024 ஆகிய மூன்று நாட்களுக்கு பயணிகள் வசதிக்காக தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை (எம்.சி. ரோடு) ஆகிய இடங்களுக்கு காலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow