ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் இட்ட தவெகவினர்.. எதற்கு தெரியுமா?
தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ள நிலையில் சென்னை அருகே சார்பில் 25 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ள நிலையில் சென்னை அருகே தவெக சார்பில் 25 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட பொன்மார் ஊராட்சி போலச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கொடி ஏற்றி, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி பொன்மார் ஊராட்சி 8 வது வார்டு உறுப்பினர் ராஜா ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருப்போரூர் ஒன்றிய தலைவர் தீனதயாளன் (எ) தீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 25 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியேற்றினார்.
முன்னதாக கொடியேற்ற வந்த தமிழக வெற்றிக்கழக ஒன்றிய தலைவருக்கு மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து, ஆர்த்தி எடுத்து கட்சியின் பொதுச் செயலாளர்க்கு வரவேற்பு அளிப்பது போன்று ஒரு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினருக்கு சால்வை மற்றும் ஆள் உயர மாலை அணிவித்தனர். தொடர்ந்து பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள் என அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
த.வெ.க மாநாடு நெருங்கும் நிலையில், தொண்டர்களுக்கு கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களும் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நம் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பதும் எனக்குத் தெரியும். அரசியலை, வெற்றி-தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல்.”
“ ஆழமான அக உணர்வாகவும், கொள்கைக் கொண்டாட்டமாகவும் அணுகப் போகும் நம்முடைய அந்தத் தருணங்கள், மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும். அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி.”
“ மாநாட்டுக் களப்பணிகளில் மட்டுமல்லாமல், நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப் போகும் அந்தத் தருணங்களுக்காகவே, என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது. இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும்.” என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?