”பாதுகாப்பான குழந்தை பிறப்பை உறுதி செய்ய வேண்டும்” – பொது சுகாதாரத்துறை உத்தரவு!
இம்மாதம் 88,527 பிரசவங்கள் நடைபெறவுள்ளதாகவும் பாதுகாப்பான குழந்தை பிறப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 27,135 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 88,527 பிரசவங்கள் இந்த மாதம் நடைபெறும் உள்ளது. இதில் குழந்தை பிறப்பின் பாதுகாப்பை 100% உறுதி செய்ய மாவட்ட சுகாதாரத் துணை இயக்குனர் அலுவலகங்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டது.
அந்த வகையில் தமிழகத்தில் 1000 பிறப்புகளுக்கு 8 குழந்தைகளும் பிரசவ காலத்தில் ஒரு லட்சம் பெண்களில் 40 கர்ப்பிணிகளும் உயிரிழப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கிறது. இதற்கு உயர் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
இது போன்ற கர்ப்பிணிகளை கண்டறிந்து அவர்களை அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெர முன்கூட்டியே பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் குறிப்பாக பிரசவ தேதி அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்கு முன் அல்லது வலி ஏற்படும் பொழுது திட்டமிட்டபடி மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதி பொது அவசியம் எனவும் பொது சுகாதாரத் துறை அறிவுரை வழங்கி உள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் 88,527 பிரசவங்கள் நடைபெற உள்ளதாகவும் இந்த பிரசவங்கள் 100% பாதுகாப்புடன் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இதன் வாயிலாக கர்ப்பகால உயிரிழப்புகள் குறையும் எனவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
What's Your Reaction?