ஜம்மு காஷ்மீர், ஹரியானாவில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 

Oct 8, 2024 - 08:06
Oct 8, 2024 - 07:34
ஜம்மு காஷ்மீர், ஹரியானாவில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 

பாஜக ஆளும் அரியானாவில் கடந்த 5ஆம் தேதி ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. இதேபோல், ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த 2 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன. இதற்காக 2 மாநிலங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இந்நிலையில், ஜம்முகாஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டிற்கு பின் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பேரவைத் தேர்தல் என்பதால் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் அரியானாவில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழும் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow