வான் சாகச நிகழ்ச்சியில் சோகம்: ‘ஏதோ துரதிஷ்டம்..’ - ஆர்.எஸ்.பாரதி
வான் சாகச நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதம் ஏதோ துரதிஷ்டவசமாக நிகழ்ந்து விட்டது. இதை வைத்து அரசியல் செய்வது சரியல்ல என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
வான் சாகச நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதம் ஏதோ துரதிஷ்டவசமாக நிகழ்ந்து விட்டது. இதை வைத்து அரசியல் செய்வது சரியல்ல என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் மன்றம் சார்பில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பெர்னாண்டஸ் ரத்தினராஜாவுக்கு பாராட்டு விழா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்திராக கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “வான் சாகச நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றுதான். இருந்தாலும் தமிழ்நாடு அரசின் சார்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதையும் தாண்டி சிலரின் அஜாக்கிரதை காரணமாக இது நிகழ்ந்திருக்கிறது.”
”15 லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள். செல்லுகிறவர்கள் குடை உள்ளிட்டவற்றை கொண்டு சென்று இருக்க வேண்டும். இந்த இழப்புக்கு என்ன இழப்பீடு என்பதை முதலமைச்சர் தெரிவிப்பார். முன் கூட்டியே பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை தரப்பட்டிருக்கிறது.”
”2016 சட்டப்பேரவை தேர்தலின் போது, மதுரையில் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 6 பேர் இறந்திருக்கக் கூடிய செய்தி இருக்கிறது. அதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி மறந்துவிடக்கூடாது. அதேபோன்று ஜெயலலிதா கும்பகோணம் மகா குளத்தில் குளித்த போது, 100 பேர் இறந்தார்கள். அதேபோன்று 2005 இல் ஜெயலலிதா தூங்கிய காரணத்தினால் சென்னை வெள்ளத்தில் மிதந்தது. எனவே அதிமுகவினருக்கு எங்களை கேள்வி கேட்க எந்த தகுதியும் இல்லை.
”ஏதோ துரதிஷ்டவசமாக இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டது. இதை வைத்து அரசியல் செய்வது சரியல்ல,” என்று கூறினார்
What's Your Reaction?