மருத்துவர் மீது இப்படிதான் தாக்குதல் நடந்துள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
விக்னேஷ் ஏற்கனவே இந்த மருத்துவமனையில் உதவியாளராக இருந்ததால், எப்போதும் போல மருத்துவமனைக்கு வருவது போல வந்து, பாக்கெட்டில் கத்தி வைத்துக்கொண்டு வந்து தாக்குதல் நடத்தியுள்ளார்”
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பாலாஜி ஜெகநாதன் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் இன்று மருத்துவர் பாலாஜியை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார்.
விக்னேஷ் தாயாருக்கு ஒரு மாத காலமாக புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற கோபத்தில் கத்தியால் குத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த கத்திக்குத்து சம்பவத்தால் மருத்துவமனை வளாகமே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விக்னேஷ் பயன்படுத்தியதாக கூறப்படும் கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் கத்தியால் குத்தியதால் அவர் இருந்த அறை முழுவதும் ரத்தக்கறையுடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிந்துள்ளனர். மருத்துவருக்கு கழுத்து, காதுக்கு பின்புறம், நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் மருத்துவருக்கு கத்திக்குத்தியால் குத்தப்பட்டுள்ளார்.உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார்.தற்போது நலமாக உள்ளார்.மேலும் 8 மணி நேரத்திற்கு பிறகு மருத்துவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவனையில் ஆய்வு செய்தார். மேலும் கத்திக்குத்தில் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரது தாய் காஞ்சனா கடந்த 6 மாதமாக இந்த மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.
புற்றுநோய் முற்றிய நிலையில்தான் அவரது தாய் அனுமதிக்கப்பட்டார். சிறந்த சிகிச்சை அளித்தோம். ஆனால் அவர்களாகவே மருத்துவமனையில் இருந்து டிசார்ஜ் செய்து அழைத்துச் செல்லப்பட்டனர். விக்னேஷ் ஏற்கனவே இந்த மருத்துவமனையில் உதவியாளராக இருந்ததால், எப்போதும் போல மருத்துவமனைக்கு வருவது போல வந்து, பாக்கெட்டில் கத்தி வைத்துக்கொண்டு வந்து தாக்குதல் நடத்தியுள்ளார்” என தெரிவித்தார்.
What's Your Reaction?