அரசியல் To ஆன்மிகம்...... off line செல்லும் பெண் மாஜி !

2026 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக தலைமை விரக்தியில் இருக்கும் நிலையில், திமுகவின் பெண் மாஜி அமைச்சருக்கு பக்தி முத்தி விட்டதாக உப்புக்கு பேறு போறான மாவட்டங்களில் உள்ள உடன்பிறப்புகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Aug 20, 2026 - 18:49
அரசியல் To  ஆன்மிகம்...... off line  செல்லும் பெண் மாஜி !

திமுகவை பொறுத்தவரை மாவட்டச் செயலாளர் என்பவர் அந்த மாவட்டத்தின் முதலமைச்சர் போன்றவர். அப்படி உப்புக்கு பேர் போன மாவட்டத்திற்கு மாவட்டத்திற்கு பவர் ஃபுல்லா 30 வருஷமாக  கன்ட்ரோலில் வைத்திருந்தவர்.

தனது தந்தையின் செல்வாக்கால் அரசியல் களத்தில் குதித்த திமுக பெண் மாஜி அமைச்சர் 1996 முதல் மாவட்ட மகளிரணி பதவியும், 2011ல் திமுக மாநில மகளிரணி துணைச் செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினராவும், 2017 ல் ஜூன் முதல் தூத்துக்குடி மாவட்ட திமுக பொறுப்பாளராகவும், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர், 2001 ஆம் ஆண்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் என தந்தையை போலவே தனக்கென ஒரு இடத்தை பிடித்துகொண்டு கிடுகிடுவென உயரத் தொடங்கினார்.

அதன் பின்பு 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தபோது தந்தையின் தனது செல்வாக்கை வைத்து தன் மகளுக்கும்  தனக்கும் என இரு சீட்டுகளை தலைமையிடம் கேட்டபோது அதற்கு தலைமை மறுத்து ஒருவருக்கு மட்டும் தான்  சீட் என்று கூறியது.

அப்போது மாஜி அமைச்சரின் தந்தை பெரிய மனசோடு தன் மகளுக்கு விட்டுக்கொடுத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற்று 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் திமுக ஆட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு தேர்தல் போது அதிமுக சார்பில் செல்ல பாண்டியனும், திமுக சார்பில் பெண் மாஜி அமைச்சரும் இருவருக்கும் இடையில்  நீயா? நானா? என்ற போட்டி நிலவிய போது ஆனால் நான் தான் எப்போதும் என்று 88,045 வாக்குகள் பெற்று அதிமுக அமைச்சரை தோற்கடித்து வெற்றியைத் தட்டி சென்றார். மேலும் 2021 ம் ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போதும் அதிமுக சார்பில் எஸ்.டி.ஆர். விஜயசீலனை விட 50,310 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்தார்.

ஒரு பக்கம்  தொடர் வெற்றிகளை சந்தித்து வந்தாலும் அவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் இருந்து கொண்டு வரும் நிலையில், குறிப்பாக அமைச்சராக பொறுபேற்ற பிறகு அவருக்கும் அவரது சகோதரர்களுக்கும் மோதல் போக்கு திமுகவினர் கொதிப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக தலைமையிடம் புகார்கள் பறந்தும் இவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது உப்புக்கு பேர் போன உடன்பிறப்புளின் குமுறலாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்கள்  ஒர்ஜனல் உடன்பிறப்புகள் மீது சொத்துக்குவிப்பு வழக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெண் மாஜி அமைச்சரின்  சகோதரர் மீது லஞ்சம் ஒழிப்புதுறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின்பு 2022 ஆம் ஆண்டு மாஜி அமைச்சரின் சகோதரையும் அவரது குடும்பத்தினரை விடுவித்தது.  உப்புக்கு பேர் போன தன்னை யாரும் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்த திமுகவின் பெண் மாஜி அமைச்சர் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பெருத்த இடியாக இருந்தது.

இதனிடையே  உப்புக்கு பேர் போன தொகுதியை தனது வெற்றிடமாக வைத்திருந்த  பெண் மாஜி அமைச்சர்  2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதிதாக கட்சி தொடங்கிய தவெக இவரின் வெற்றியை அசைத்து பார்த்து விட்டது. அவருக்கு எதிராக தவெக சார்பில் நின்ற நடிகர் ஸ்ரீநாத் 37,731 வாக்குகள் வித்தியாசத்தில்  படும் தோல்வியை அடைந்தார்.

இதனால் மன உளைச்சலாக ஆளான பெண் மாஜி அமைச்சர் அரசியல் வட்டாரங்களில் சற்று தள்ளி இருந்து ஆன்மிகத்திற்கு சென்றுவிட்டதாக உப்புக்கு பேறு போறான வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் நம்பியிருந்த கிறிஸ்துவ வாக்குகள் கைநழுவி போனதாலும், டெல்லியுடன் தலைமை பேசி வருவதாலும், இந்து கோயில்கள் மீது பார்வையை திருப்பி தீவிர பக்தையாகி விட்டார். ஆடி மாதத்தையொட்டி கோயில், கொடை விழாக்களுக்கு அழைப்பு வந்தால் உடனடியாக அங்கு சென்று, மணிக்கணக்கில் கோயில்களில் நேரத்தை கழிக்கிறார்" என்று உப்புக்கு பேர் போன வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow