சந்திரன் சஞ்சரிப்பு டூ காதல் கைக்கூடல்… இன்றைய (12.06.2026 ராசிபலன்)
இன்று (12.06.2026) வைகாசி 29, வெள்ளிக்கிழமை. சந்திரன் மேஷ ராசியில் சஞ்சாரம் செய்கிறார். சித்த யோகம் மற்றும் பிரதோஷம் இணைந்துள்ளதால், சுக்ர பகவானின் அருள் கிடைக்கக்கூடிய சிறப்பான நாள். கன்னி ராசியின் அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தினருக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷம்
இன்று, சந்திரன் உங்கள் இராசியில் சஞ்சரிப்பது உங்களுக்கு வலுவான நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும். உங்களுக்கு இன்று குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் தொழில் தொடர்பாக ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் அனுசரித்து போகவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. பங்குதாரரை பகைத்து கொள்ள வேண்டாம்.பொருளாதார நிலை நல்ல முன்னேற்றத்தை காணும்.
ரிஷபம்
புண்ணிய ஸ்தலத்திற்குச் செல்வது, அல்லது சில திட்டமிடுவது மனதிற்கு அமைதியைத் தரும். சட்டம் தொடர்பான பிரச்சனைகளில் வெற்றியும், இடம் மாற்றமும் கிடைக்கும். உங்களுடைய தைரியம் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலையில் சாதகமான சூழல் உருவாகும்.
மிதுனம்
உங்களுடைய படைப்பாற்றல், கலை தொடர்பான வேலைகளை முடிக்க உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் மிகவும் விரும்பி செய்யக்கூடிய வேலைகள் வேகமாக முடியும். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர்கள்.
கடகம்
இன்று எந்த ஒரு வேலையும் அர்ப்பணிப்புடன் செய்தால், அதற்கான பலன்கள் உடனடியாக பெறலாம். மனநிம்மதியுடன் காணப்படுவீர். குடும்பத்தில் சில முக்கிய விவாதங்கள் நடைபெறும் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலக பணிகளை முடிப்பதில் புதிய யோசனைகளுடன் செயல்படுவீர்கள்.
சிம்மம்
பரபரப்பான நாளாக இருந்தாலும், ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் உங்களுடைய ஈடுபட அதிகரிக்கும். வேலையில் மேலதிகாரிகள், சக ஊழியர்கள் சற்று தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. இன்று எதிலும் ஒழுக்கமான அணுகுமுறை தேவைப்படும்.
கன்னி
எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. உங்கள் பேச்சு மற்றும் தொடர்புகளில் நிதானத்தையும் எச்சரிக்கையையும் கடைப்பிடிக்கவும். மற்றவர்களுடன் எந்த வித மோதலிலும் ஈடுபடாமல் கவனமாக இருங்கள். உங்கள் வேலையை முடிப்பதில் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
துலாம்
வேலை சம்பந்தமான பிரச்சனைகள் தீர்க்க புது வித முயற்சிகளை எடுப்பீர்கள். புதிய வேலைக்கான திட்டங்களை தொடங்கலாம். வியாபாரத்தில் லாபமுண்டு. புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். குடும்பத்தினர் அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சொத்து சம்பந்தமாக சில பிரச்சனைகளை உருவாக்க முயற்சி செய்யலாம்.
விருச்சிகம்
வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும்.உங்களுடைய நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு செலவுகளை செய்வதை அவசியம். உங்களின் விடாமுயற்சி கைகொடுக்கும். குடும்பத்தில் அமைதியும் ஸ்திரதன்மை அனுபவிப்பீர்கள்.
தனுசு
எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். மனநிம்மதி கிட்டும்.நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரம் தொடர்பாக எடுக்கும் சிறிய ரிஸ்க் கணிசமான லாபத்தை தரும். காதல் தொடர்பாக மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சிலரும் புதிய காதல் மனதில் மலரும்.
மகரம்
கூட்டுத் தொழிலில் செய்யக்கூடிய நபர்களுக்கு குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். உங்களுடைய அன்றாட வீட்டு வேலைகளை முடிக்க இன்று ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்கும். கவுரவப் பதவிகள் தேடி வரும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உங்கள் பிள்ளைகள் தொடர்பான சில முக்கிய முடிவை எடுக்க வேண்டியிருக்கும்.
கும்பம்
உங்களுடைய உடல் ஆரோக்கியம் தொடர்பாக கவனமாக இருக்கவும். பருவநிலை மாற்றம் உடல் நலன நலனில் உங்களுக்கு தொந்தரவு தர வாய்ப்புகள் உண்டு. அதனால் உணவு விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். கையில் பணம் புரளும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். எதையும் சிந்தித்து நிதானமாக செயல்படுவது அவசியம்.
மீனம்
இன்று உங்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். உங்கள் வேலை தொடர்பாகவும் குடும்பத்திலும் பொறுமை, புத்திசாலித்தனம் தேவை.. தொழில் முறை பயணங்கள் எதிர்பார்த்த நல்ல பலனை தரும். வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாகும்.
What's Your Reaction?

