பரபரப்பான நீலாங்கரை... கைதான உதயநிதி..!
முதலமைச்சர் விஜயையும், நடிகையையும் தொடர்புப்படுத்தி ஆபாசமாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சையில் நேற்று(ஆகஸ்ட் 03) திமுக சார்பில் காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் இன்றைக்கு வறண்ட பாலைவனம் போல் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இதே நேரத்தில் நம்முடைய தலைவர் முதலமைச்சராக இருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்குமா? இல்லை நம் தலைவர் தான் இந்த நிலைமைக்கு விட்டிருப்பாரா? என்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, ”இன்னைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரல ஆனா இத பத்தி இங்க இருக்கக்கூடிய முதலமைச்சர் வாயை திறந்து பேசறாரா? பேச மாட்டேங்கிறார். அவருக்கு இருக்கக்கூடிய ஒரே கவலை என்ன?" என்று உதயநிதி கூறும் போது கூட்டத்தில் இருந்தவர்களிடமிருந்து 'த்ரிஷா த்ரிஷா" என சத்தம் வரவே. 'திமுக மேல என்ன பொய் வழக்கு போடலாம் பொய் கேஸ் போடலாம்' என்று உதயநிதி பேசினார். மீண்டும் 'த்ரிஷா த்ரிஷா எனும் சத்தம் அங்கு கூடியிருந்தவர்களிடமிருந்து அதிகரிக்கவே அந்த சத்தமிட்டவர்களை நோக்கி அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக ”எங்க தண்ணி வருதோ இல்லையோ, அங்க தண்ணி வரணும்” என்று உதயநிதி ஆபாசமான அர்த்தத்தோடு கூறியதாகக் கூறியதாகவும், கூட்டத்திலிருந்தவர்கள் ஆரவாரத்தோடு சத்தம் போட்டதை கேட்டு அதை ஆமோதிக்கும் வகையில் நகைத்துக்கொண்டே ”காவிரியை சொன்னேன்” என்று பேசி இருக்கிறார் என்றும் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜயையும் நடிகையையும் தொடர்புப்படுத்தி பேசியதாக உதயநிதி மீது பதியப்பட்டுள்ள வழக்கில், அவரை கைது செய்ய நீலாங்கரை இல்லத்தில் இன்று(ஆகஸ் 04) காலை முதலே போலீசார் குவிந்துள்ளனர். இந்நிலையில், அவரை கைது செய்யக் கூடாது என்பதற்காக திமுகவினர் கொத்துக் கொத்தாக நீலாங்கரைக்கு படையெடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகனும் உதயநிதியின் மச்சானுமான சபரீசன் மற்றும் மாஜி அமைச்சர்கள் அடுத்தடுத்து வருகைத் தந்துள்ளனர்.
போலீசார் நீலாங்கரைக்கு வந்த்துமே முதல் ஆளாக மாஜி அமைச்சர் மா.சுப்ரமணியன் வந்து போலீசாருடன் நீண்ட பேச்சுவார்த்தை மேற்கொண்டார். ஆனால், போலீசார் அதற்கெல்லாம் அசைந்து கொடுத்த்தாக தெரியவில்லை. தொடர்ந்து, சபரீசன், துரைமுருகன், சேகர்பாபு என அடுத்தடுத்து திமுகவின் முக்கிய தலைகள் நீலாங்கரையில் உதயநிதிக்கு ஆதரவாக குவிந்தனர்.
இதற்கிடையில், உதயநிதியை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நண்பகல் 12 மணி வரை உதயநிதிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நீதிபதி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அப்படிப்பட்ட உத்தரவு எங்களுக்கு இன்னும் வரவில்லை என்றும், உதயநிதியை கைது செய்தே தீருவோம் என்று கூறி அவரை இறுதியாக போலீசார் கைது செய்தனர்.
What's Your Reaction?

