வந்தே பாரத் ரயிலில் உணவு தரம் இல்லை- நடிகர் பார்த்திபன் குற்றச்சாட்டு

‘வந்தே பாரத்’-தில் தந்தே உணவு தரமாக இல்லை. பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை

Oct 14, 2024 - 20:54
வந்தே பாரத் ரயிலில் உணவு தரம் இல்லை- நடிகர் பார்த்திபன் குற்றச்சாட்டு

வந்தே பாரத் ரயிலில் உணவு தரமாக இல்லை படுமோசம் என  நடிகர் பார்த்திபன் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2022ம் ஆண்டு தனது சொந்த மாநிலமான குஜராத் தலைநகர் காந்தி நகரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பையை இணைக்கும் வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தமிழகத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலில் சைவம் மற்றும் அசைவ  உணவுகள் கட்டணத்துடன் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், வந்தே பாரத் ரயிலில் உணவு தரமாக இல்லை படுமோசம் என  குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் இருந்து நேற்று கோவைக்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த நடிகர் பார்த்திபன்  வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவுகள் தரமற்றதாக இருப்பதாக கூறி திருப்பூர் ரயில் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரில் உணவு பரிமாறியவர்கள் சிறப்பாக செய்தார்கள் ரயில் சுகாதாரமாக இருந்தது., ஆனால் இரவு வழங்கிய உணவு மற்றும் சிக்கன் படு மோசமாக இருந்தது உணவுக்காக பெருந்தொகையை வாங்கிக் கொண்டு இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது..!!!  ஆரோக்கியம் அவசியம் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரை தனது எக்ஸ் வலைதளம் மற்றும் முகநூலில் புகார் உடன் பதிவிட்டுள்ளார் நடிகர் பார்த்திபன். அந்த பதிவில்,  “முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது. சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. ‘வந்தே பாரத்’-தில் தந்தே உணவு தரமாக இல்லை. பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன். 
நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென... என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow