ஷகீலா கிரியேட்டிவான ஆள்.. நான் இயக்குநரானது என் தலையெழுத்து: வனிதா விஜயகுமார்!
’Mrs & Mr' படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள வனிதா விஜயகுமார் குமுதம் வாசகர்களுக்காக வழங்கிய நேர்காணல் விவரங்கள்.

’Mrs & Mr' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார், நடிகை வனிதா விஜயகுமார். தனது முன்னாள் கணவரும், நடன இயக்குநருமாகிய ராபர்ட்டுடன் மீண்டும் மணக்கோலத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, பரபரப்பைப் பற்றவைத்தார். கடந்த வாரம் படம் ரிலீஸான நிலையில், வனிதா குமுதம் வாசகர்களுக்காக அளித்த பிரத்யேக நேர்க்காணல் அளித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-
இந்தப் படத்துக்கான ஆரம்பப்புள்ளி எது?
"நானும், ஷகீலா அக்காவும் சில வருஷங்களா நிறைய கதைகளை டிஸ்கஸ் பண்ணிக்கிட்டே இருந்தோம். நிறைய பேருக்குத் தெரியாத விஷயம், அவங்க ரொம்ப கிரியேட்டிவான ஆள் என்பது. 'இப்படிப் பண்ணலாம், அப்படிப் பண்ணலாம்'னு நிறைய விஷயங்கள் சொல்வாங்க. நிறைய கதைகள் பேசினாலும், வித்தியாசமான கதையைத்தான் படமா பண்ணணும்கிற முடிவுல இருந்தேன். 40 வயசுங்கிறது, எல்லாரோட வாழ்க்கையிலயும் மிகப்பெரிய மைல்கல். இந்த சமயத்துலதான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல மாற்றங்கள் நிகழும். நானும் அந்தக் கட்டத்துல இருந்ததுனால, அதையே படமா எடுக்கலாம்னு தோணுச்சு. அந்த வயசுல இருக்குற கணவனும் மனைவியும் அதையெல்லாம் எப்படி எதிர்கொள்றாங்க அப்படிங்கிற விஷயத்தை யதார்த்தமா, இந்தப் படத்துல சொல்லியிருக்கோம். கணவன் மனைவி உறவுச்சிக்கல், குழந்தையின்மை பிரச்னை ஆகிய விஷயங்களைப் பேசியிருக்கோம்."
இயக்குநரான அனுபவம் எப்படி இருந்தது?
"ரொம்ப ரொம்ப கஷ்டம்; ஈஸியே கிடையாது. நமக்குத் தொழில் தெரிஞ்சிருந்தாலும், இந்தத் தலைமுறையை வெச்சு வேலை வாங்குறது ரொம்பவே சவாலான விஷயம். ஒரு விஷயம் எடுத்தா, அதை முடிக்காம தூங்காத தலைமுறை நாங்க. ஆனா, அவங்க டைமிங்கே வேறயா இருக்குது. விளையாட்டுத்தனம் ஜாஸ்தி, ஈஸியா டிப்ரஷன் ஆகிடுறாங்க. அதனால, அவங்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டியதா இருந்தது. பெரிய டெக்னீஷியன்களோட ஒர்க் பண்ணியிருக்க மாட்டாங்க; அதனால, சொல்லிப் புரியவைக்கணும். எனக்கே கத்துக்கிற அனுபவமாத்தான் இந்த டைரக்ஷன் இருந்துச்சு."
இயக்குநராகும் ஆசை எப்போ வந்துச்சு?
"டைரக்ஷன் பண்ற ஆசை இல்லை; ஆனா, டைரக்ஷன் டிபார்ட்மென்ட்ல ஒர்க் பண்ற ஆசை இருந்துச்சு. சின்ன வயசுலயே பி.வாசு அங்கிள் படங்கள்ல அசிஸ்டென்ட் டைரக்டரா ஒர்க் பண்ணியிருக்கேன். அப்பவே நிறைய கதைகள் யோசிச்சு வெச்சிருந்தேன். சொல்லப்போனா, அப்பவே பவுண்ட் ஸ்கிரிப்ட்லாம் ரெடி பண்ணேன். ஆனா, அதுக்கு மேல எந்த முயற்சியும் பண்ணல. இத்தனை வருஷம் கழிச்சு நான் எதிர்பாராத நேரத்துல விபத்து மாதிரி, இந்த வாய்ப்பு அமைஞ்சது. நான் இயக்குநர் ஆனது என் தலையெழுத்துனுதான் சொல்லணும்."
( கட்டுரையாளர்: காவேரி மாணிக்கம்/ குமுதம் / 23.07.2025) (முழு நேர்காணல் தொகுப்பினை தற்போது கடைகளில் விற்பனையாகும் குமுதம் இதழில் காண்க)
What's Your Reaction?






