தினமும் வெந்தயம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? அறிவியல் சொல்வது என்ன?

வெந்தயம் நீரிழிவு, கொலஸ்ட்ரால், செரிமானக் கோளாறுகள் மற்றும் முடி உதிர்வு போன்ற பிரச்னைகளைக் கட்டுப்படுத்த உதவும் மருத்துவக் குணங்கள் நிறைந்த இயற்கை மூலிகையாகும். தொடர்ந்து சரியான அளவில் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்றன.

தினமும் வெந்தயம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? அறிவியல் சொல்வது என்ன?
வெந்தயம் பலன்கள்

வெந்தயம் இந்தியாவில் தொன்மையான காலம் முதல் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய அஞ்சறைப்பெட்டி மூலிகையாகும். இது பருப்பு வகையைச் சேர்ந்த தாவரமாகும். வெந்தய விதைகள் மட்டுமன்றி அதன் இலைகளும் மருத்துக் குணங்கள் நிறைந்தவை. சித்த மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் அனைத்தும் வெந்தயத்தின் பல்வேறு நன்மைகளை உறுதிப்படுத்துகின்றன.

வெந்தயம் என்பது லெகுமினோசே குடும்பத்தைச் சேர்ந்த, தன்னுடைய மகரந்தச் சேர்க்கையால் வளரக்கூடிய, சிறிய விதைகள் கொண்ட ஓராண்டுப் பயறு வகைத் தாவரமாகும். இதன் மற்றொரு பெயர் 'கிரேக்க வைக்கோல்'. இந்தியத் துணைக்கண்டம் மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதிகளில் தோன்றிய இது இப்போது உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. எனினும் இந்தியா, எத்தியோப்பியா, எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் அதிகம் உற்பத்தி செய்கின்றன.

வெந்தயத்தில் இருக்கும் ஊட்டச்சத்து

சிறுவிதையான வெந்தயம் நிறைவான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடன்ட்கள் என பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துகள் இந்த சிறியவிதைகளில் அடங்கி உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துகளும் குறைந்த அளவில் உள்ளன.

ஆய்வுகள் சொல்வது என்ன?

சில ஆய்வுகளில், தினமும் 6 கிராம் (3 கிராம் வீதம் இரண்டு முறை) வெந்தயப் பொடியை சுமார் 2 மாதங்கள் உட்கொண்ட இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளில், இரத்தச் சர்க்கரை, கொழுப்பு அளவு மற்றும் உடல் எடையில் முன்னேற்றம் காணப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெந்தயத்தில் உள்ள கேலக்டோமனான் (Galactomannan) என்ற கரையக்கூடிய நார்ச் சத்து, கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை மெதுவாக்க உதவுகிறது.

ட்ரைகோநெல்லின் (Trigonelline) மற்றும் பிற உயிர்ச்செயல்பாட்டு சேர்மங்கள், இரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் பங்கு வகிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
4 ஹைட்ராக்ஸி ஐசோலூயுசின் (4-Hydroxyisoleucine) தூண்டக்கூடும் என்பதற்கு ஆய்வக மற்றும் சில மருத்துவ ஆய்வு ஆதாரங்கள் உள்ளன.
வெந்தயம், நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைப்பதற்கும், இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளில் இரத்தச் சர்க்கரை கட்டுப் படுத்துவதற்கும் உதவக்கூடும் என்று சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சித்த மருத்துவத்தில் வெந்தயம்

வெந்தயம் குளிர்ச்சித் தன்மை கொண்டதாக சித்த மருத்துவத்தில் கருதப்படுகிறது. பித்தம் தொடர்பான சில உடல்நலப் பிரச்னைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.
பிரசவத்திற்குப் பிறகு பெண் களுக்கு வெந்தயக் கஞ்சி அல்லது வெந்தயக் களி கொடுக்கும் வழக்கம் நம் பாரம்பரியத்தில் உள்ளது. சில ஆய்வுகள் மற்றும் அனுபவங்களின்படி, 50 டீஸ் இரவி உண உங்க மருத்இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவக்கூடும்.

மாதவிடாய்க் கோளாறுகளின் போது கை வைத்தியமாக வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தை வறுத்துப் பொடியாக்கி நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு அல்லது தேனுடன் கலந்து உட்கொள்வது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி மற்றும் இடுப்பு வலியைக் குறைக்க உதவக்கூடும்.
அஜீரணம், வாய்வுத் தொல்லை, வயிற் றுப் பொருமல் போன்ற செரிமானப் பிரச்னைகளுக்கு வெந்தயக் கஷாயம் உதவக் கூடும்.

வெந்தயத்தில் உள்ள கொலின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கல்லீரலின் இயல்பான செயல்பாட்டிற்கு ஆதரவளிக்கக்கூடும். மேலும், கொலின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடை மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் வெந்தயம் துணைபுரியும். வெந்தயத்தில் உள்ள சப்போனின்கள் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துகள் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவக்கூடும். இதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு வெந்தயம் உதவும்.

வெந்தயத்தில் உள்ள ஆன்டி ஆக்சி டன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர் மங்கள் உடல் அழற்சியைக் குறைக்க உதவக்கூடும். இதனால் மூட்டு வலி மற்றும் வீக்கங்களைக் குறைப்பதில் துணை புரியலாம்.

அழகு பராமரிப்புக்கு வெந்தயம்

முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும் முடியை பளபளவென்று இயற்கையாக வைக்கவும் வெந்தயம் உதவும். அதனால்தான் கூந்தல் தயாரிப்பு பொருள்களில் வெந்தயமும் முக்கிய இடம் பிடிக்கிறது. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலைமுடியில் பேக் போட்டு தலை குளித்தால் இந்த விதையில் இருக்கும் மியூசிலேஜ் திரவம், முடியின் வேர் காலின் ஈரப்பதத்தைப் பாதுகாத்து, முடி உதிர்வைக் கட்டுப்படுத்த உதவும். கூந்தலுக் கான எண்ணெய் தயாரிப்பின் போது ஒரு கைப்பிடி வெந்தயம் சேர்த்து காய்ச்சினால் முடி உதிர்வு கட்டுப்படும்.

வெந்தயம் உணவுப் பொருள் மட்டுமல்ல, பல மருத்துவக் குணங்கள் நிறைந்த இயற்கை மருந்தாகும். நவீன அறிவியல் ஆய்வுகளும், சித்த மருத்துவ அனுபவங்களும் வெந்தயத்தின் பல நன்மைகளை உறுதிபடுத்துகின்றன. சரியான அளவில் தொடர்ந்து பயன்படுத்தினால் நீரிழிவு, செரிமானக் கோளாறுகள், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, உடல் பலவீனம் போன்ற பல பிரச்னைகளுக்கு உதவக்கூடிய சிறந்த மூலிகையாக பல விந்தைகளை செய்யக் கூடியதாக வெந்தயம் இருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow