அதுல இளையராஜா தான் கிங்... பிச்சைக்காரனுக்கு யாரும் விருது தரல... விஜய் ஆண்டனி அதிரடி!

விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சூப்பர் ஹிட் அடித்த பிச்சைக்காரன் படத்தின் 3ம் பாகம் குறித்து விஜய் ஆண்டனி கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jul 4, 2024 - 15:45
அதுல இளையராஜா தான் கிங்... பிச்சைக்காரனுக்கு யாரும் விருது தரல... விஜய் ஆண்டனி அதிரடி!
விஜய் ஆண்டனி - இளையராஜா

சென்னை: விஜய் நடித்த சுக்ரன் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. தனது மெலடி பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த விஜய் ஆண்டனி, அவர்களை ஆட்டம் போட வைக்கவும் தவறவில்லை. இசையமைப்பாளராக தனது பாடல்களில் முகம் காட்டி வந்த விஜய் ஆண்டனி திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். முதன்முதலாக இந்த செய்தியை கேட்ட போது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும், முதல் படமான ‘நான்’ ரிலீஸானதும் மிரண்டு விட்டனர். முதல் படத்திலேயே ஹீரோ கம் ஆன்டி வில்லனாக ரசிகர்களுக்கு செம வைப் கொடுத்திருந்தார். 

விஜய் ஆண்டனியின் இரண்டாவது படமாக ரிலீஸான சலீம், இன்னொரு அதிரி புதிரி ஹிட்டாக அமைந்தது. இதனால் விஜய் ஆண்டனி படங்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்தன. இதை நியாயப்படுத்தும் விதமாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக கோலிவுட் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்டது. கோலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட்டான அம்மா சென்டிமெண்ட்டை பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவாகியிருந்தது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் தெறி மாஸ் ஹிட் அடித்தது. இதனால் விஜய் ஆண்டனியின் மார்க்கெட் தாறுமாறாக உயர்ந்தது. 

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் இனி விஜய் ஆண்டனியின் பெயரும் இருக்கும் என ரசிகர்கள் அடித்துக் கூறினார். இதெல்லாம் சேர்ந்து யார் கண் பட்டதோ தெரியவில்லை, அதன்பின்னர் விஜய் ஆண்டனி நடித்த படங்களில் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும் கால்ஷீட்டே இல்லாத அளவிற்கு பிஸியாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. அதேபோல், இயக்குநர், எடிட்டர், தயாரிப்பாளர் என அடுத்த சகலகலா வல்லவனாகும் முயற்சிகளிலும் விஜய் ஆண்டனி இறங்கி அடித்தார். கடந்தாண்டு மட்டும் விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், பிச்சைக்காரன் 2, ரத்தம், கொலை என 4 படங்கள் வெளியாகின. இந்தாண்டு ரோமியோ படம் மூலம் தன் கணக்கை தொடங்கிய விஜய் ஆண்டனி, அடுத்து மழை பிடிக்காத மனிதன் ரிலீஸை எதிர்பார்த்துள்ளார்.  

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் விஜய் ஆண்டனி, பிச்சைக்கரன் 3ம் பாகம், இசையமைப்பாளர் இளையராஜா குறித்தும் பேசியுள்ளார். அதாவது, நானும் விஜய் மில்டனும் பல ஆண்டுகளாக நண்பர்கள் இருந்தாலும் இப்போதுதான் இணைந்து பணியாற்றுகிறோம் எனக் கூறியுள்ளார். மேலும் மழை பிடிக்காத மனிதனின் கதை பற்றிய பேசிய அவர், இப்படத்தில் மழை சம்பந்தப்பட்ட பல காட்சிகள் இருக்கின்றன. அதோடு மழை ஒரு குறியீடு எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல், கதையின் படி, ஒரு குறி்ப்பிட்ட விஷயத்துக்காக, யார் கண்ணிலும் படக்கூடாது என்று என்னை அந்தமானில் கொண்டு விடுகிறார் சரத்குமார். யாரும் வேண்டாம் என்று ஒதுங்கிற கேரக்டரான எனக்கு அங்கே சில பிரச்னைகள் வருகிறது. நான் யார், எப்படி மாறினேன் என்பது தான் பிச்சைக்காரன் கதை எனவும் தெரிவித்துள்ளார். 

இந்தப் படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த்தை நடிக்க வைக்க முயற்சித்தோம். உண்மையாகவே அவர் நடித்துள்ளாரா என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் எனவும் கூறிய விஜய் ஆண்டனி, விரைவில் பிச்சைக்காரன் 3 உருவாகவுள்ளதாகவும் அப்டேட் கொடுத்துள்ளார், தமிழ், தெலுங்கில் உருவாகும் பிச்சைக்காரன் 3, 2026ம் ஆண்டு வெளியாகும் எனவும். இது பெரிய பட்ஜெட்டில் அது உருவாகவுள்ளதாகவும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் சினிமாவிலும் ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. வருங்காலத்தில் அதனை கூடுதலாக பயன்படுத்தினால் சினிமாவுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றார். அதற்கடுத்து 2 படங்களை தயாரிக்கிறேன். நான் கதைகளை தேர்ந்தெடுக்க ரொம்ப யோசிக்கவில்லை. அந்த சூழ்நிலையும் தேவையும் படங்களை ஓகே செய்கிறது. ஆடியன்ஸ் பாணியில் பல கதைகளுக்கு ஓக்கே சொன்னாலும், ரொம்ப யோசித்தால் பிரச்னைகள் வரும். எதையும் ரிஸ்க் என்று நினைப்பதில்லை. வாழ்ந்து பார்க்க ஆசைப்படுவதாக தெரிவித்தார். 

மேலும், தொடர்ந்து பேசிய விஜய் ஆண்டனி, தன்னை பொறுத்தவரையில் பணம் அதிக மகிழ்ச்சியை தராது. நான் இப்போது பணத்துக்காக ஓடுகிறேன். ஒரு கட்டத்தில் பணத்தேவைகள் நிறைவடைந்தால், மனம் மாறினால் இந்த ஓட்டத்தை கூட நிறுத்திவிடலாம். சினிமாவை விட்டால், எனக்கு அரசியல் செட் ஆகாது. எனக்கு முகஸ்துதி செய்யவும் பிடிக்காது. பிச்சைக்காரன் முதற்பாகம் பெரிய வெற்றி பெற்றதுடன் மக்களால் பாராட்டப்பட்டது. ஆனால், அந்த படத்துக்கு பெரியளவில் விருதுகள் கிடைக்கவில்லை என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். மேலும், நான் இசையமைப்பாளர் என்பதால் படங்களில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். இன்றைய காலகட்டத்தில், நவீன டெக்னாலாஜி மூலம் பாடல்களை ஈஸியாக உருவாக்கலாம். ஆனால், பின்னணி இசையைமைப்பதும், அதை படத்துக்கு பலமாகவும் உயிரோட்டமாகவும் கொடுப்பது தான் கஷ்டம். என்னை பொறுத்தவரையில் பின்னணியில் இசையின் கிங் இசைஞானி இளையராஜாதான் என அதிரடியாக தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow