Indian 2: கமலின் இந்தியன் 2 ஸ்பெஷல் ஷோ... தமிழக அரசு அனுமதி... FDFS டைம் தெரியுமா?
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 திரைப்படம், நாளை வெளியாகிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு கண்டிஷனுடன் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளை (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் சித்தார்த், எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் லீடிங் கேரக்டரில் நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா படமாக வெளியாகும் இந்தியன் 2-க்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புள்ளது. இதனையடுத்து இந்தியன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஷங்கரின் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான ட்ரீட் இருக்கும் என்பது கன்ஃபார்ம். இந்தியன் 2ம் பாகமும் அப்படித்தான் இருக்கும் என எதிர்பார்த்தாலும், கதை, திரைக்கதையில் மேஜிக் இல்லையென்றால் படம் பிளாப் ஆகிவிடும். அதேநேரம் கமலின் இந்தியன் தாத்தா கெட்டப்பும் படம் ரிலீஸாகும் முன்பே நெட்டிசன்களால் பங்கமாக ட்ரோல் செய்யப்பட, அதுவும் படக்குழுவுக்கு ஜெர்க் கொடுத்துள்ளது. இன்னொரு பக்கம் அனிருத்தின் இசையில் பாடல்களும் எதிர்பார்த்தளவில் இல்லை என்ற விமர்சனங்களும் ஷங்கரை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இதையெல்லாம் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இந்தியன் 2 ரிலீஸில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.
அதேபோல், இந்தியன் 2 படத்திற்கான ஆன்லைன் புக்கிங் தொடங்கி இரண்டு நாட்கள் கடந்த பின்னரும், டிக்கெட் ரிசர்வேஷனும் மந்தமாக இருப்பதாகவே தெரிகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது படக்குழுவினருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது கிடையாது. அதேநேரம் பண்டிகை காலங்களில் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி ஒருநாளில் 5 காட்சிகள் வரை திரையிடலாம், அப்படி இந்தியன் 2 படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கும் தமிழக அரசு பெர்மிஷன் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், படம் வெளியாகும் நாளை (ஜூலை 12) ஒருநாள் மட்டும் 5 காட்சிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. மேலும், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடைசி காட்சி நள்ளிரவு, அதாவது அதிகாலை 2 மணிக்கு முன்பாக முடிந்துவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் காலை 9 மணி காட்சி திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் இந்தியன் 2 மாஸ் காட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களின் ஒருசில பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு இந்தியன் 2 படத்தை திரையிட ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன.
What's Your Reaction?