மோடி vs விஜய்… கடுப்பான ராகுல்!

தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ள நிலையில், விஜய்யின் தேசிய அரசியல் நகர்வுகள் காங்கிரஸ் மேலிடத்துக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Aug 19, 2026 - 21:04
மோடி vs விஜய்… கடுப்பான ராகுல்!

திமுகவிலிருந்து விலகி தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள நிலையில், விஜய்யின் தேசிய அரசியல் நகர்வுகள் காங்கிரஸ் மேலிடத்துக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, விஜய்யின் வளர்ந்து வரும் அரசியல் செல்வாக்கு ராகுல் காந்திக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற திமுக, இந்தியா கூட்டணியில் முக்கியமான சக்தியாக உருவெடுத்தது. இதனால், தேசிய அளவில் மு.க. ஸ்டாலினின் செல்வாக்கு அதிகரித்ததாகவும், ராகுல் காந்தியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த சூழலில் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.

ஆனால், தற்போது தவெக மாநில அரசியலைத் தாண்டி தேசிய அளவில் தனது அரசியல் அடித்தளத்தை உருவாக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. வட இந்திய மாநிலங்கள் மற்றும் பெருநகரங்களில் சமூக வலைதளங்கள், இன்ஃப்ளூயன்சர்கள் உள்ளிட்டோர் மூலம் விஜய்யை தேசிய அளவில் பிரபலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விஜய்யை 2029 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பேச்சுகளும் தவெக வட்டாரத்தில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இளைஞர்களை ஈர்க்கும் புதிய அரசியல் முகமாக விஜய்யை தேசிய அளவில் கட்டமைக்கும் முயற்சி நடைபெறுவதாகவும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், தமிழகத்தில் தவெக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விஜய்யின் தேசிய அரசியல் ஆசைகளை வெளிப்படையாக எதிர்க்க முடியாத சூழலில் இருப்பதாகவும், அதேவேளையில் ராகுல் காந்தியின் பிரதமர் வேட்பாளர் வாய்ப்பை விட்டுக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2029 தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ்–தவெக இடையே எதிர்காலத்தில் அரசியல் போட்டி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow