எங்களுக்கு எதிரானால், திமுகவை எதிர்ப்போம்- விவசாய சங்கம்

விவசாய நிலங்களை அபகரித்து கார்ப்பரேட் நிறுவனம் இடம் ஒப்படைக்கும் வேலையில் திமுக அரசு ஈடுபட்டுக் கொண்டுள்ளது.

Nov 25, 2023 - 14:29
Nov 25, 2023 - 18:22
எங்களுக்கு எதிரானால்,  திமுகவை எதிர்ப்போம்- விவசாய சங்கம்

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு எதிரான செயல்களில் திமுக அரசு செயல்பட்டால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக செயல்படுவோம் தஞ்சையில் தமிழக காவேரி விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் தமிழக காவேரி விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக அரசு பொறுப்பேற்ற காலத்திலிருந்து இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத அளவிற்கு தமிழகத்தில் விவசாயிகள் மீது தாக்குதல் நடைபெற்று கொண்டுள்ளது.

விவசாய நிலங்களை அபகரித்து கார்ப்பரேட் நிறுவனம் இடம் ஒப்படைக்கும் வேலையில் திமுக அரசு ஈடுபட்டுக் கொண்டுள்ளது. சிப்காட் நிறுவனத்திற்கு நிலங்கள் எடுப்பதற்காக இதற்கு காவல்துறையை பயன்படுத்தி வருகின்றது.

நில ஒருங்கிணைப்பு சட்டம் என்ற பெயரில் மொத்த விவசாய நிலங்களையும், அபகரிக்க காவல்துறையை இந்த  திமுக அரசு பயன்படுத்துகிறது.சிப்காட் நிறுவனத்தை எதிர்த்து போராடும் விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அச்சுறுத்தும் நடவடிக்கையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

இந்த திமுக அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதை மாற்றிக்கொள்ள வேண்டும்.ஆனால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக செயல்படுவோம் என கூறினார்

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow