விஷ்ணு விஷாலுக்கு இப்படி ஒரு நோயா? ஷாக்கான ரசிகர்கள்..!

ஆட்டோ இம்யூன் நோய்க்காக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறேன் அதன் பக்க விளைவு தான் என்று நடிகர் விஷ்ணு விஷால்,ரசிகர் கேட்ட கேள்விக்கு விளக்கமளித்துள்ளார்.

விஷ்ணு விஷாலுக்கு இப்படி ஒரு நோயா? ஷாக்கான ரசிகர்கள்..!
vishnu vishal

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான விஷ்ணு விஷால், குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், ஃப் ஐ ஆர், கட்டா குஸ்தி என்று நல்ல கதைக்களம், சீரியஸ், காமெடி, என பல அம்சங்கள் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானவர். ராட்சசன் திரைப்படம் இவர் கெரியரின் மிக முக்கியப் படம் என்றே சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவின் தி பெஸ்ட் கிரைம் த்ரில்லர்கள் லிஸ்ட் இந்த படம் இருக்கும். 

அவ்வப்போது, காமெடிக்கு முக்கியத்துவம் வழங்கும் படங்களிலும் நடித்து குடும்ப ஆடியன்ஸையும் தனக்கென்று வைத்துள்ளார். அந்தவகையில், கட்டா குஸ்தி படமும் யாரும் எதிர்பார்க்காத ஹிட் படமாக அவருக்கு அமைந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்ய லஷ்மி இணைந்து நடித்திருந்தார். படம் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், கட்டா குஸ்தி 2 திரைப்படம் விரைவில் வர இருக்கிறது. இப்படம், ஜுலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வரும் நடிகர் விஷ்ணு விஷாலிடம், சமீபத்தில் உங்களுடைய முகம் ஏன் மிகவும் சோர்வாக இருக்கின்றது என்று ரசிகர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, “கடந்த 3 - 4 ஆண்டுகளாக நான் 'ஆட்டோ இம்யூன்' (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன். அதற்கான சிகிச்சையும் மருந்துகளும் உடலுக்கு மிகவும் அவசியமானவை என்பதால், அவற்றை முழுமையாகத் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வருகின்றன.

மருந்துகளின் விளைவாகவே தனது முகம் மற்றும் உடலில் சோர்வு தெரிகிறது. இந்நோயின் போது உடலில் ஏற்படும் தொடர்ச்சியான வீக்கம் மற்றும் அதற்காக உட்கொள்ளும் மருந்துகள் மூலம் அதிக சோர்வு ஏற்படுகின்றன. இது சாதாரண சோர்வை விட நீண்டகால சோர்வை ஏற்படுத்துகின்றன. அந்த மருந்துகளின் பக்கவிளைவுகள் தான் என் முகம் சோர்வாக உள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து, தன் நலனை பற்றி விசாரித்த என்னுடைய  ரசிகர்களுக்கு நன்றி என்றும் விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் பதிலளித்துள்ளார். 

ஏற்கனவே நடிகை சமந்தாவிற்கு ஆட்டோ இம்யூன் நோய் இருந்த நிலையில், அவர் பல ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் ஆட்டோ இம்யூன் நோய் கண்டறியப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow