12 ராசிகளுக்கும் என்ன பலன்? வேலை, பணம், குடும்பம் எப்படி?

இந்த வாரம் 12 ராசிகளுக்கும் வேலை, தொழில், பணவரவு, குடும்பம், ஆரோக்கியம், பயணம் உள்ளிட்ட அம்சங்களில் என்ன பலன்கள் காத்திருக்கின்றன என்பதையும், ஒவ்வொரு ராசிக்கான பரிகாரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

Jul 25, 2026 - 07:00
12 ராசிகளுக்கும் என்ன பலன்? வேலை, பணம், குடும்பம் எப்படி?
weekly rasi palan

மேஷம்

தடைகள் நீங்கி, தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். பிறரால் ஏற்பட்டிருந்த வீண் பழிகள் நீங்கும். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். வாரிசுகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். அசையும், அசையா சொத்து சேரும், வழக்குகளில் இழுபறி நீடிக்கும். செய்யும் தொழிலில் முயற்சிக்கு ஏற்ப வளர்ச்சி ஏற்படும். கலைஞர்கள் படைப்பு ரகசியத்தைப் பிறரிடம் பகிர வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர் வாக்குறுதி அளிப்பதில் நிதானம் தேவை. பயணத்தில் போதைக்கு இடம்தர வேண்டாம். அடிவயிறு, கழுத்து, முதுகு உபாதைகள் வரலாம். கணபதி வழிபாடு களிப்பு சேர்க்கும்.

ரிஷபம்

உழைத்த உழைப்பிற்கு உயர்வுகள் கிட்டக்கூடிய காலகட்டம். அதை அலட்சியத்தால் நழுவவிட வேண்டாம். பணியிடத்தில் நேரம் தவறாமை முக்கியம். பிறர் தவறை பெரிதுபடுத்த வேண்டாம். இல்லத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். உறவுகள் வருகையும் அதனால் ஆதாயமும் உண்டு. சுபகாரியங்களில் நிதானம் முக்கியம். ஆடம்பரச் செலவுகளைத் தவிருங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி சீராக இருக்கும். அரசியல், அரசுத்துறையினர்க்கு அமைதியே ஆனந்தம் தரும். கலைஞர்கள், படைப்பாளிகள் திறமை வெளிப்படும். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். அடிவயிறு, கண்கள், எலும்பு உபாதை வரலாம். நரசிம்மர் வழிபாடு நன்மை சேர்க்கும்.

மிதுனம்

திட்டமிட்டும், நேரம் தவறாமலும் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் திட்டமிடல் முக்கியம். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரலாம், ஏற்பதே நல்லது. வீட்டில் சீரானபோக்கு நிலவும். சகோதர உறவுகளால் சகாயம் கிட்டும். வழக்குகளில் சாதகமான தீர்வு கிட்டும். வரவு சீராக இருக்கும். செய்யும் தொழிலில் புதிய முதலீடுகளில் நிதானம் முக்கியம். கலைஞர்கள் வறட்டு ரோஷம் தவிருங்கள். அரசு, அரசியலில் உள்ளோர் வாக்கில் நிதானம் தேவை. பயணத்தில் உடைமைகள் பத்திரம். நரம்பு, கண்கள், முதுகு உபாதை வரலாம். துர்க்கை வழிபாடு துளிர்க்கச் செய்யும்.

கடகம்

திட்டங்கள் செயலாகத் தொடங்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். திட்டமிடலும் நேரம்தவறாமையும் மிகமிக முக்கியம். இல்லத்தில் சுமுகமான சூழல் நிலவும். வாரிசுகளுடன் இருந்த விரிசல் மறையும். தம்பதியர் இடையே ஒற்றுமை உருவாகும். அசையும், அசையா சொத்து சேரும். சுபகாரியங் கள் கைகூடி வரும். செய்யும் தொழிலில் லாபத்தின் அளவுகோல் அதிகரிக்கும். அரசு, அரசியலில் உள்ளோர் வாக்கில் கவனம் இருந்தால், செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்குத் தொடர் வாய்ப்புகள் கிட்டும். பயணத்தில் வேகத்தை அறவே தவிருங்கள். காது, மூக்கு, தொண்டை உபாதை வரலாம். பைரவர் வழிபாடு, பசுமை சேர்க்கும்.

சிம்மம்

உழைப்பின் பலனாக உயர்வுகள் வரும் காலகட்டம். அலுவலகத்தில் திறமைக்கு ஏற்ப வளர்ச்சி உண்டு. பணிகளில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் அவசியம். மேலிடத்தின் ஆதரவு கிட்டும். வீட்டில் விசேஷங்களுக்கு இடமுண்டு. வாரிசுகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். வாழ்க்கைத்துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். செய்யும் தொழிலில் பெரும் முதலீடு இப்போதைக்கு வேண்டாம். கலைஞர்கள் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். அரசு, அரசியலில் உள்ளோர் வாக்கில் நிதானம் தேவை. பயணத்தில் கவனச்சிதறல் கூடாது. ரத்தத்தொற்று, அலர்ஜி, அல்சர் உபாதைகள் வரலாம். சுதர்சனர் வழிபாடு சுபிட்சம் தரும்.

கன்னி
பெருமைகள் சேரும் காலகட்டம்.) அதேசமயம் பொறுமை மிகமிக அவசியம். பணியிடத்தில் திறமைக்கு ஏற்ப உயர்வுகளைப் பெறுவீர்கள். அடக்கம் இருந்தால், பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் குதர்க்கம் கூடவே கூடாது. வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். வரவை சேமிப்பது நல்லது. வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் தொழிலில் வளர்ச்சி சீராகும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு மனம்போல உயர்வுகள் வரத்தொடங்கும். கலைஞர்கள், பொது இடத்தில் வீண் தகராறு வேண்டாம். வாகனத்தில் வேகம் தவிருங்கள். தலைவலி, தூக்கமின்மை, நரம்பு உபாதைகள் வரலாம். குருபகவான் வழிபாடு குதூகலம் தரும்.

விருச்சிகம்

நன்மைகள் அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் ஏற்றமும் மாற்றமும் கைகூடி வரும். சிலருக்கு புதிய பணிவாய்ப்பு மனம்போல் அமையும். வீட்டில் சிரித்த முகத்துடன் இருந்தால், சீரானபோக்கு நிலவும். ஆடை, ஆபரணம், பொருள் சேரும். உறவுகளிடையே செல்வாக்கு உயரும். தரல், பெறலில் அவசரம் வேண்டாம். குடும்ப ரகசியம் பிறரிடம் பகிர வேண்டாம். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசு அரசியலில் உள்ளோர் வாக்குறுதிகளில் கவனமாக இருங்கள். கலைஞர்களின் முயற்சிகள் பலிதமாகும். பயணப்பாதையில் பிறர் தரும் உணவு, பானம் தவிருங்கள். காது, மூக்கு, தொண்டை உபாதை வரலாம். இஷ்ட அம்மன் வழிபாடு இனிமை சேர்க்கும்.

துலாம்
( சுமுகமான சூழல் உருவாகும் 3ம் காலகட்டம். நாவடக்கம் இருந்தால் அது நிலைக்கும். பணியிடத்தில் பொறுப்பு உணர்ந்து செயல்படுவது அவசியம். வேண்டாத புலம்பலைத் தவிருங்கள். வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். சுபகாரியங்களில் முன்நிற்கும் சூழல் உருவாகும். குலதெய்வ வழிபாட்டிற்கு நேரம் அமையும். குழந்தைகளால் பெருமை சேரும். செய்யும் தொழிலில் முழு கவனம் தேவை. அரசு, அரசியலில் உள்ளோர் அகலக்கால் வைக்க வேண்டாம். கலைஞர்கள் ஜம்பமும் தலைக்கனமும் தவிர்த்தால், வாய்ப்புகள் வரும். பயணத்தில் நிதானம் முக்கியம். அடிவயிறு, நரம்பு, சளி உபாதைகள் வரலாம். சிவன், பார்வதி வழிபாடு சீரான நன்மை தரும்.

தனுசு

சீரானபோக்கு நிலவக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் இதுவரை இருந்த சங்கடங்கள் நீங்கும். புதிய பொறுப்புகளில் திட்டமிடல் மிகமிக முக்கியம். இல்லத்தில் விடியல் வெளிச்சம் பரவும். தடைபட்டிருந்த சுபகாரியங்கள் கைகூடும். ரத்த பந்தங்களிடையே இருந்த வீண் தர்க்கம் வேண்டாம். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். செய்யும் தொழிலில் முயற்சிகள் பலன் தரும். அரசு, அரசியலில் உள்ளோர் புறம்பேசுவோரிடம் இருந்து உடனே ஒதுங்குங்கள். கலைஞர்களின் நீண்டநாள் கனவுகள் பலிதமாகும். வாகனத்தில் வேகம் கூடவே கூடாது. தூக்கமின்மை, பற்கள், கால் வலி வரலாம். வேலவன் வழிபாடு, விசேஷ நன்மை தரும்.

மகரம்

ஏற்றமும் மாற்றமும் ஏற்படக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் கைகூடும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். இல்லத்தில் இனிய சூழல் நிலவும். பெற்றோர் ஆசியுடன் சுபகாரியங்கள் கைகூடும். ஆடை, ஆபரணம் சேரும். தேவையற்ற ரோஷம் யாரிடமும் வேண்டாம். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் நிதானம் முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோரின் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். வாகனப் பழுதை உடன் சீர் செய்யுங்கள். இடுப்பு, தலைவலி, அஜீரணம் உபாதை வரலாம். மாருதி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

கும்பம்

உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் சோம்பலை உதறுதல் மிகமிக முக்கியம். பொறுப்புகளை நேரடியாகக் கவனியுங்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்தால், விடியல் வெளிச்சம் பரவும். வீண் சந்தேகத்தால் அதை விரட்டவேண்டாம். தம்பதியரிடையே அன்யோன்யம் உருவாகும். பெற்றோர், பெரியோரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். செய்யும் தொழிலில் நேரடி கவனம் செலுத்துங்கள். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு நிதானம் முக்கியம். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வரத்தொடங்கும். பயணத்தில் நிதானம் முக்கியம். மூட்டு, எலும்பு, சுளுக்கு உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு தழைக்கச் செய்யும்.

மீனம்

பொறுப்பு உணர்வுடன் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் பொறுமையும் பொறுப்பு உணர்வும் முக்கியம். தேவையற்ற தர்க்கம் யாரிடமும் வேண்டாம். குடும்பத்தில் குதர்க்கம் தவிர்த்தால், சந்தோஷம் குடிபுகும். வேண்டாத வெறுப்பை உறவுகளிடம் காட்டவேண்டாம். சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை களைக் கேளுங்கள். செய்யும் தொழிலில் நிதானமே நல்லது. வர்த்தகக் கடனில் அலட்சியம் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர் தலைக்கனம் தவிருங்கள். கலை, படைப்புத் துறையினர் சலிப்பைத் தவிருங்கள். பயணத்தில் உடைமை பத்திரம். மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, காது உபாதைகள் வரலாம். ஏழுமலையான் வழிபாடு ஏற்றம் தரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow